தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.8.12

மிகவும் சுகாதாரமான நவீன கழிவறையைக் கண்டுபிடிப்பவர்களுக்கு பில்கேட்ஸ் உதவி !


மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஸ்தாபகரும் உலகின் 2 ஆவது மிகப்பெரிய பணக்கா ரருமானவர் பில்கேட்ஸ். இவர் அபிவிருத்தி அடைந் து வரும் நாடுகளில்சுத்தமின்மை காரணமாக நோய் கள் பரவாமல் இருக்கவும் மரணங்கள் நிகழாமல் த விர்ப்பதற்கும் மிகவும் சுகாதாரமான நவீன பாவிக்கு ம் திறன் மிக்க கழிவறை (Toilet) உபகரணத்தைக் கண் டு பிடிக்கும் அமைப்பைத் தேர்வு செய்து நிதியுதவி வ ழங்குவதற்காக தேடி வருகின்றார்.இதற்காக இவரு ம் இவரது மனைவியும் இணைந்து அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ' நவீன கழிவறை விற்பனையை துரிதப் படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் தம
து அறக்கட்டளை மூலமாக சிறந்த மாதிரிக்கான பரிசுத் திட்டத்தை அறிவித்து ள்ளனர்.
பில்கேட்ஸ் இது பற்றி கருத்துக் கூறுகையில், பொது மக்களின் சுகாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பகுதியாக கழிவறை விளங்குகின்றது. இதைப் பற்றி நீங்கள் சிந்தித்தால் மனிதர்களின் கௌரவத்தைப் பாதுகாப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கின்றது. இவர் மேலும் தெரிவிக்கையில், 'இன்றைய சுகாதாரமான உலகில் நாம் பாவித்து வரும் சாதாரண கழிவறைகள் உலகின் 40% வீதமான பொது மக்களுக்குப் பொருத்தமானதாக இல்லை. ஏனெனில் இவற்றில் பெரும்பாலானவை தண்ணீர், சாக்கடை, மின்சாரம், மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் முறை என்பவற்றுடன் நேரடித் தொடர்பைக் கொள்வதில்லை' என்றார்.
நவீன கழிவறையைக் கண்டு பிடிப்பதற்கான முயற்சி பிரிட்டன்,கனடா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகங்களில் மேர்கொள்ளப் பட்டது. இவற்றில் சூரிய ஒளிப் படல் மூலம் இயங்கி ஐதரசன் வாயுவையும், மின்னையும் உருவாக்கக் கூடிய கழிவறை உபகரணத்தை கலிபோர்னியா இல் உள்ள தொழிநுட்பக் கல்லூரி கண்டு பிடித்தது.
உலகில் சுமார் 2.5 பில்லியன் பொதுமக்கள் உடல் நலத்துக்கு உகந்த கழிவறைகளைப் பாவிக்காததால் பல வித நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சுகாதாரமற்ற கழிவறைகள் முறையான சாக்கடை சுத்தம் இன்மை போன்றவற்றால் அழுக்குப் படிந்த நீர் மற்றும் உணவை உண்ணும் 1.5 மில்லியன் சிறுவர்கள் வருடந்தோறும் உலகில் இறந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது எயிட்ஸ் மற்றும் மலேரியா ஆகிய நோய்களால் இறக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்

0 கருத்துகள்: