மணிப்பூரில் நேற்று அடுத்தடுத்து இடம்பெற்ற நான் கு குண்டுவெடிப்பில் நால்வர் படுகாயமடைந்திருப் பதாக தெரிவிக்கப்படுகிறது.மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று க்கொண்டிருந்த மைதானத்திற்கு அருகில், மாவட்ட தலைமைக்காரியாலயத்திற்கு அருகில் காலை 8 ம ணியளவில் ஒரு குண்டு வெடித்துள்ளது.மணிப்பூர்
ரிஃப்ளெஸ் பரேட் மைதானத்தில் சுதந்திர தின உரையை மணிப்பூர் முதல்வர் ஓ.இபோபி சிங் நிகழ்த்திக்கொண்டிருந்த போது அருகிலிருந்த கேபிடள் கம்பி ளெக்ஸில் ஏனைய சக்தி வாய்ந்த மூன்று குண்டுகளும் வெடித்துள்ளன. இது வரை எந்தவொரு அமைப்பும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

ஆயுதங்களை கைவிட்டு நாட்டின் அபிவிருத்தி பாதையில் இணைந்து கொள்ளுமாறு கிளர்ச்சியாளர்களுக்கு மணிப்பூர் முதல்வர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இக்குண்டுவெடிப்புக்கு பின்னணியிலும் கிளர்ச்சியாளர்களே செயற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சுதந்திர தின விழாக்களில் கலந்து கொள்ள வேண்டாம் என ஏழு கிளர்ச்சி குழுக்கள் நேற்றைய முன் தினம் பகிரங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நேற்று குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக