ஒலிம்பிக் போட்டிகளுக்கான கொடி பிரேசிலை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற து.இதன்பிரகாரம் அடுத்த ஒலிம்பிக் விழா நடைபெறவுள்ள றியோ டி ஜெனைரோ நகருக்கு இந்த கொடி கொண்டு செல்லப்பட்டுள்ளது. 2012 லண்டன் ஒலிம்பிக் விழா நிறைவில் றியோ டி ஜெனைரோ மேயர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான கொடியை பொறுப்பேற்றிருந்தார்.இதன்மூலம் 2016 றியோ டி ஜெனைரோ ஒலிம்பிக் விழாவிற்கான தயார்படுத்தல்கள் ஆரம்பமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லண்டன் ஒலிம்பிக் விழாவில் 22 ஆம் இடத்தைப் பெற்ற பிரேசில் 17 மொத்தப் பதக்கங்களைப் வெற்றிகொண்டிருந்தது.
ஒலிம்பிக் விழாவை நடத்தும் முதலாவது தென் அமெரிக்க நகர் என்ற சிறப்பையும் றியோ டி ஜெனைரோ நகரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் போட்டிகளுக்கு முன்னரான நிர்மாணப் பணிகள் குறித்த கவலைகள் நீடிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக