தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.8.12

நியூயார்க் போலீசில் டர்பன் அணிய சீக்கியர்களுக்கு அனுமதி உண்டா


நியூயார்க் காவல்துறையில் பணிபுரியும் சீக்கியர்கள் இனி தாடி வளர்த்து டர்பன் அணிய அனுமதிக்குமாறு அந்நகர மேயர் மைக்கேல் ப்ளம்பர்க்கிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகர காவல் துறையில் பணிபுரியும் சீக்கியர்கள் தாடி வைக்கவும், டர்பன் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஸ்கான்சினில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலத்தில்

துப்பாக்கிச் சூடு நடந்ததில் 6 பேர் பலியாகினர்.  இந்த சம்பவத்தையடுத்து நியூயார்க் நகர காவல் துறையில் பணிபுரியும் சீக்கியர்கள் தாடி வைக்கவும், டர்பன் அணியவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்நகர மேயர் மைக்கேல் ப்ளம்பர்க்கிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நியூயார்க் நகர காம்ப்ட்ரோலர் ஜான் சி. லூ ப்ளம்பர்க்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, விஸ்கான்சின் படுகொலை தேசத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையடுத்தாவது நியூயார்க் நகர காவல்துறையில் உள்ள சீக்கியர்கள் தாடி வளர்க்கவும், டர்பன் அணியவும் அனுமதி அளித்து சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். விஸ்கான்சின் தாக்குதல் சகிப்புத்தன்மையின்மையையே காட்டுகின்றது.
செப்டம்பர் 11ல் (அல் கொய்தா தாக்குதல்) இருந்து சீக்கியர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை யுனைடெட் சீக்ஸ் என்ற குழு வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்: