ஒலிம்பிக் போட்டி முடிந்து விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் ஊர் திரும்புவதால் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. கடந்த மாத இறுதியில் துவங்கிய ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தன.விளையாட்டு திருவிழா முடிந்த நிலையில் வீரர்களும், ரசிகர்களும் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். வழக்கமாக லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில், 95 ஆயிரம் பயணிகள் பல்வேறு
நாடுகளுக்கு புறப்பட்டு செல்வார்கள். ஒலிம்பிக் போட்டியையொட்டி பயணிகளின் கூட்டம் இங்கு அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 1.16 லட்சம் பயணிகள் இந்த விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர். இவ்வளவு பேரின் உடமைகளை பரிசோதிப்பது கடினம் என்பதால், விளையாட்டு வீரர்களது உடமைகள் ஒலிம்பிக் கிராமத்திலேயே பரிசோதிக்கப்பட்டு விட்டன. பதக்கம் பெற்ற தங்கள் நாட்டு வீரர்களை, ரசிகர்கள் பலர் விமான நிலையத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். விமான நிலையத்தில் கூட்டம் அலை மோதுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக