இன்றைய உலகில் வானியலாளர்களின் கனவாக வேற்றுக்கிரகங்களில் புது வகை உயிரினங்கள் வா ழுகின்றனவா என்ற தேடலைக்கூறலாம்.ஆனா ல் இதிலிருந்து வேறுபட்டு இவர்களது இந்தத் தேடல் பூமிக்கு அடியிலும் மேற்கொள்ளப் படுவது ஆச்சரிய மான விடயம்.பூமிக்கடியில் மிகுந்த ஆழத்தில் ஏதும் புதுவகை உயிரினங்கள் வாழ்கின்றனவா என சர்வ தேச விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த ஆறு வானி யலாளர்கள் (Astronauts)
கொண்ட சர்வதேச குழு ஒன் று ஆராய்ச்சி செய்யவுள்ளது.
செப்டம்பர் 7 இல் தொடங்கி தொடர்ந்து ஆறு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த ஆராய்ச்சி இத்தாலியில் உள்ள வெயில் அதிகம் தாக்கும் தீவான சர்டினியாவில் பூமிக்கடியில் மிகுந்த ஆழத்தில் நடைபெறவுள்ளது.கொண்ட சர்வதேச குழு ஒன் று ஆராய்ச்சி செய்யவுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் போது விண்வெளியில் இவர்கள் பாவித்த உபகரணங்களும் மேற்கொண்ட பயிற்சியும் உதவக் கூடியதாக அமையும் என்றே கூறப்படுகின்றது. இவர்களை வழிநடத்தும் அமைப்பு சுருக்கமாக 'கேவ்ஸ்' (CAVES - Cooperative Adventure for Valuing and Exercising human behavior and performance Skills) என அழைக்கப் படுகின்றது.
இந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் குழுவுக்கு அவர்கள் பூமிக்கடியில் இருக்கும் போது ஒரு தடவை மாத்திரமே உணவு மற்றும் உபகரணங்கள் விநியோகம் செய்யப்படும். சரியான உபகரணத்தை மிகவும் அவதானமாகத் தேர்ந்தெடுப்பதுடன் கார்கோ தயாரிப்பிற்கு மிஷன் கன்ட்ரோலுக்கு 24 மணித்தியாலங்கள் அவகாசம் வழங்கப் பட வேண்டும்.
இந்த நிலத்துக்கடி உயிரின ஆராய்ச்சியில் ஈடுபடும் 'Cavenauts' தமது பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல் தேவைகளுக்கு விண்வெளியில் பாவித்த அதே முறையையே கையாள்வதுடன் தொடர்பாடலுக்கு இன்னமும் விருத்தி செய்யப்பட்ட புதிய தொழிநுட்பத்தை பரீட்சித்துப் பார்த்தும் உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக