தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.8.12

அமெரிக்காவின் லூசியானாவில் அவசரகாலப் பிரகடனம்


அமெரிக்காவின் லூசியானா – அலபாமா பகுதியை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஈசாக் புயல் பெ ரும் அனர்த்தங்களை விளைவிக்கும் என்று அஞ்சப் படுகிறது.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த மாநி லங்களில் அவசரகால நிலையை பிரகடனம் செய் துள்ளார்.லூசியானா கவர்னர் பொபி ஜின்டேன் அப்ப குதிக்கு விரைந்து கரையோரப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேறும்படி பணித்துக் கொண்டிருக் கிறார்.ஈசாக் புயல் ஒரு முட்டைக்குள் இரண்டு மஞ் சள் கருக்கள் இருப்பதைப்
போல இரண்டு சூறாவளிக் கண்கள் கொண்ட புயலா கும் ஆகவே நான்கு தாக்குதல்களை அது செய்யும் அபாயம் உள்ளது.
ஏற்கெனவே ஏழு வருடங்களுக்கு முன்னர் கற்றினா புயல் வந்தபோது 1800 பேர் மரணித்தது தெரிந்ததே, இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது தெரியாமல் அன்றைய அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ் தடுமாறியதும் தெரிந்ததே.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் வேளையில் இந்தப் புயல் வருவதால் அரசியல் தலைவர்கள் புயலை விட வேகமாக சீறிக்கொண்டு நிற்கிறார்கள்.
இதேவேளை கடந்த சனிக்கிழமை தென்னமெரிக்க நாடான வெனிசியூலாவில் உள்ள அம்னே நகரத்தில் உள்ள பிரதான ஓயில் குதம் வெடித்ததில் மரணித்தோர் தொகை 48 ஆக உயர்ந்தது.
தீயைக் கட்டுப்படுத்த பெரும் போராட்டம் நடைபெறுகிறது, அங்கிருந்த எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவே விபத்துக்குக் காரணமாகும்.

0 கருத்துகள்: