அமெரிக்கா நடத்திய உளவு விமானத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ-தலிபான் மூத் த தளபதி முல்லா தாதுல்லாவும், 20 போராளிகளும் உயிரிழந்ததை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ள து.பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானிலும் ஆப் கானிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா உளவு விமானங்கள் கடந்த 18-ம் தேதியில் இருந்து தொடர்ந்து குண்டுவீசித் தாக் கின. ஆப்கனின் குனார் மலைப்பகுதியில்
நடைபெற் ற இத்தாக்குதலில் தெஹ்ரிக்
-இ-தலிபான் மூத்த தளபதி முல்லா தாதுல்லா, துணைத் தளபதி அப்துல் ரஹ்மான் மற்றும் 19 போராளிகள் கொல்லப்பட்டதா க ஆப்கன் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த 8 போராளிகள் ஆப்கனின் அசாதாபாத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குனார் மாகாணத்தில் நடந்த முதல் விமானத் தாக்குதல் இது என்பதும், முதன் முறையாக பாகிஸ்தான் போராளி அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்கத் தாக்குதலில் தளபதி முல்லா தாதுல்லாவும் 20 போராளிகளும் உயிரிழந்ததை தலிபான் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாகிஸ்தானின் பஜார் பழங்குடியினப் பகுதிகளில் தாக்குதல் நடத்திவிட்டு, ஆப்கனின் குனார் மாகாணத்தில் உள்ள மறைவிடங்களுக்குத் திரும்பிய பின்னர் அவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
பஜார் பகுதியைச் சேர்ந்த தலிபான் தளபதி ஒருவர் கூறுகையில், "போராளிகளை வேவு பார்ப்பதற்கான மின்னணு சிப்பை முல்லா தாதுல்லா தங்கியிருந்த வளாகத்தில் யாரோ ஒருவர் பொருத்தியுள்ளார். இதன்மூலம் அவரது மறைவிடத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து, தாக்குதல் நடத்தி அவர் கொல்லப்பட்டார். அவரைத் தவிர 12 பாதுகாவலர்கள், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த துணைத்தளபதி அப்துல் ரஹ்மான் ஆகியோரும் உயிரிழந்தனர்'' என்று தெரிவித்தார்.
முல்லா தாதுல்லா ஏற்கெனவே பஜார் பகுதியின் தலிபான் தலைவராக இருந்தார். எனினும், அங்கு பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஆண்டு எடுத்த ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து நூற்றுக்கணக்கான போராளிகளுடன் ஆப்கனுக்குத் தப்பினார். தற்போது அவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பஜார் பகுதியின் புதிய தலிபான் தளபதியாக மௌலானா அபு பக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
"பத்ருதீன் சாகவில்லை'
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க விமானங்கள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஹக்கானி போராளி அமைப்பின் தளபதி பத்ருதீன் ஹக்கானி கொல்லப்பட்டதாக வந்த செய்திகளை தலிபான் அமைப்பு மறுத்துள்ளது. ஹக்கானி அமைப்பின் மூத்த தளபதியான மௌல்வி அகமது ஜான் கூறுகையில், ""பத்ருதீன் ஹக்கானி இறக்கவில்லை. அவர் நலமாக இருக்கிறார். அவர் தனது குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களுடன் இணைந்து ஆப்கனில் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். செவ்வாய்க்கிழமை நடந்த விமானத் தாக்குதலில் பலியான ஹக்கானி குடும்பத்தைச் சேர்ந்த ஒரே நபர் 13 வயது ஒசாமா மட்டும்தான். ஹக்கானி அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்காத அச்சிறுவன், பத்ருதீன் ஹக்கானிக்கு தூரத்து சொந்தக்காரனாவான்'' என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக