தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.8.12

குறுகிய காலத்தில் 10 ஆபிரிக்க நாட்டு அதிபர்கள் பதவியின் போது மரணம்!


குறித்த ஒரு நாட்டின் தலைவர் தான் பதவி வகித்த போது,  மரணிப்பது மிக அரிதான ஒரு விடயம்.ஆ னால்  கடந்த 4 வருடத்தில் இதுவரை 13 உலகின் மு க்கிய தலைவர்கள் தமது பதவியின் போது மரணித் துள்ளனர். இதில் பெரும்பான்மையாக அதாவது 10 பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தலைவர்கள் ஆவா ர்கள்.இறுதியாக சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை  எதியோப்பியாவின் பிரதமரான
மேலெஸ் ஷெநவி நீண்ட நாள் நோயால்
அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர் திடீரென மரணமானா ர். 57 வயதான இவரது இறுதிச் சடங்கில் மெழுகு திரிகளுடன் ஆயிரக்கணக்கா ன மக்கள் கலந்து கொண்டனர்.

ஜூலையில் கானாவின் அதிபர் ஜோன் அட்டா மில்ஸ் தனது 68 ஆவது வயதில் தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப் பட்டு மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்கில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

ஏனைய ஆபிரிக்கத் தலைவர்கள் மற்றும் இறப்புக்கான காரணம் என்பவை சுருக்கமாக கீழே -

3. மலாவி அதிபர் பிங்கு வா முத்தரிக்கா (78 வயது) - மாரடைப்பு (ஏப்ரல் 2012)
4.குனியா பிஸ்ஸாவு அதிபர் M B சன்ஹா (64 வயது) - நீண்டகால நோய் (ஜனவரி 2012)
5.லிபிய அதிபர் முஹம்மர் கடாஃபி (69 வயது) - கொலை (ஒக்டோபர் 2011)
6.நைஜீரிய அதிபர் உமரு யர் அடுவா (58 வயது) - சிறுநீரக இதய பாதிப்பு (மே 2010)
7.கபொன் அதிபர் ஒமர் பொங்கோ (73 வயது) - மாரடைப்பு (ஜுன் 2009)
8.குனியா பிஸ்ஸாவு அதிபர் J.B.வியெய்ரா (69 வயது) - கொலை (மார்ச் 2009)
9.குனியா அதிபர் லன்சனா கொன்டே (வயது 74) - காரணம் தெரியவில்லை (டிசம்பர் 2008)
10.சாம்பிய அதிபர் லெவி ம்வனவசா (வயது 59) - Stroke (ஆகஸ்ட் 2008)

0 கருத்துகள்: