தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.8.12

அமெரிக்காவால் மற்றைய நாடுகளுடன் இணக்கமாக போக முடியவில்லை

அமெரிக்கா தன்னுடன் இணைந்து பணியாற்றாத நாடுகளுடன் இணக்கமாகபோக முடியாத நிலையி ல் இருக்கிறது. தன்னுடன் உறவு வைத்துக் கொள் ளாத நாடுகளும், சுதந்திரமான நாடுகளே என்கின்ற விளக்கத்தைக்கூட அதனால் புரிந்துகொள்ள முடிய வில்லை என்று ஈரானிய வெளிநாட்டு மந்திரி அலி அக்பர் சல்கானி தெரிவித்தார்.மொத்தம் 120 கூட்டு ச்சேரா நாடுகளின் பிரதிநிதிகளை தெஹ்ரானில் வைத்து சந்தித்து பேசியபோதே மேற்கண்ட கருத் தை அவர் வெளியிட்டார்.
அத்தருணம் தமது நாட்டு அணுசக்தி வேலைத் திட்டத்தையும், அதன் தாற்பரியத்தை புரிந்து கொள்ளாது அமெரிக்கா காட்டும் அத்து மீறலையும் அவர் ஆதாரங்களுடன் விளக்கினார்.
ரஸ்யா – சீனாவை கைக்குள் வைத்திருப்பதோடு, அமெரிக்காவின் சிந்தனைக்குறைபாடுகளை வலுக்குன்றிய நாடுகளுக்கு விளக்குவதிலும் தெஹ்ரான் கணிசமான முன்னேற்றமடைந்து வருகிறது.
இது இவ்விதமிருக்க சிரியாவில் கடந்த ஐந்து தினங்களாக ஆஸாத் படைகள் நடாத்திய தாக்குதல்கள் பல நூற்றுக்கணக்கான சடலங்களை வீதியில் போட்டுள்ளது.
சன்னி முஸ்லீம்கள் அதிகம் வாழும் டராயா நகரத்தில் மட்டும் 320 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, இதில் 200 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுபோன்ற காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்கள் சகல நகரங்களிலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கழகம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்: