தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.8.12

காம்பியா நாட்டில் 9 அதிகாரிகளை சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றம்

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் அதிபர் யாஹ்யா ஜாம்மேதலைமையிலான ஆட்சி நடைபெற்றது வ ருகிறது. இங்கு குற்றச்செயல்களுக்கு மரண தண்ட னை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு மரண தண்டனை விதிக்கப்ப ட்ட 47 சிறை கைதிகளுக்கு செப்டம்பருக்குள் தண்ட னை நிறைவேற்ற அதிபர் ஜாம்மே உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அங்கு 9 பேர் சுட்டுக்
கொல்லப்ப ட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கொல்லப்பட்ட அனைவரும் முன்னாள் அதிகாரிகளும், முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகளும் அடங்குவர். கடந்த 1995-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஜாம்மே ஆட்சியை பிடித்தார். அப்போது இவர்கள் அனைவரும் அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள். 

இதற்கிடையே, மீதமுள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் குழு கேட்டுக் கொண்டுள்ளது. காம்பியாவில் மரண தண்டனையை நிறுத்தும்படி ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு தலைமை செயலாளர் காத்ரீன் ஆஸ்தான் வலியுறுத்தியுள்ளார்.

0 கருத்துகள்: