தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.8.12

30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வளைகுடா நாடுக்கு செல்ல தடை


வளைகுடா நாடுகளுக்கு 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல கூடாது என்று நேபாள அரசு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை உள்பட பல்வேறு வேலைகளுக்கு செல்லும் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதாக புகார்கள் வருகின்றன. இதையடுத்து, 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வளைகுடா
நாடுகளுக்கு வேலைக்கு செல்ல கூடாது என்று நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.இத்தகவலை நேபாள தகவல் தொடர்பு துறை
அமைச்சர் ராஜ் கிஷோர் யாதவ் தெரிவித்தார். அவர் கூறுகையில்வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்லும் பெண்களின் வயது வரம்பு நிர்ணயம் குறித்த முடிவு கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றார். வளைகுடா நாடுகளில் லட்சத்து 33ஆயிரத்துக்கும் அதிகமான நேபாள இளம்பெண்கள் பணிபுரிவதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். கடந்த 2010ம் ஆண்டு மட்டும்15 நேபாள பெண்கள் லெபனானில் தற்கொலை செய்துள்ளனர். மேலும் நேபாள பெண்கள் பலர் கத்தார்சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தூதரகங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலர் பாலியல் பலாத்காரம் உள்பட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாவது அதிகரித்து வருவதால்நேபாள அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

0 கருத்துகள்: