தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.8.12

ரஷ்யாவில் 10 ஆண்டுகளாக பதுங்குழியில் அடைத்து வைக்கப்பட்ட 70 பேர் கொண்ட குடும்பம் மீட்பு.


ரஷ்யாவில், 70 பேர் கொண்ட இஸ்லாமிய உட்பிரிவு குழுவினர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பூமிக்கடியில் உள்ள பதுங்குழியில் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, கசன் நகரம். இப்பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு வசித்த, 83 வயதான பயஸ்ரஹ்மான் சத்தரோவ்,83, என்பவர் தன்னை இறை தூதராக அறிவித்து கொண்டார்.சன்னி முஸ்லிம் பிரிவை

சேர்ந்த பயஸ்ரஹ்மான், கடந்த, 70ம் ஆண்டு முதல் தனக்கென ஒரு பாணியை வகுத்து, தன்னுடைய ஆதரவாளர்களை வழி நடத்தி வந்தார். கசன் பகுதியில் உள்ள எட்டு அடுக்கு மாளிகையை தன்னுடைய ராஜ்ஜியமாக அறிவித்தார். இந்த கட்டடத்திலிருந்து வெளியேற பயஸ்ரஹ்மான் ஆதரவாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், இந்த கட்டடத்தின் தரைதளத்தில் உள்ள பதுங்கு குழியில், கடந்த 10 ஆண்டுகளாக, 70 பேர் கொண்ட குடும்பம் வசித்து வந்தது தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குடும்பத்தில் உள்ள 20 குழந்தைகள் பிறந்தது முதல் சூரிய வெளிச்சத்தையே பார்த்ததில்லை. இக்குடும்பத்தில் உள்ள 17 வயது பெண் தற்போது கர்ப்பமாக உள்ளார். இவர்கள் அனைவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். மருத்துவ உதவியோ, கல்வி அறிவையோ அளிக்காத இந்த குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

0 கருத்துகள்: