தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.8.12

பொது இடங்களில் வழிபாடு நடத்த அமெரிக்கர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் : ஒபாமா


குருத்வார் சீக்கியர் கோவில் துப்பாக்கிச்சூடு சம்பவ ம் போன்று இனி நடக்காதிருக்க நாம் அனைவரும் ஒருமித்த குரலுடன் சபதம் எடுத்துக் கொள்ளவேண் டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித் துள்ளார்.வெள்ளைமாளிகையில் நடைபெற்ற இப்தா ர் நோன்பு விருந்து நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் அங்கு மேலும் பேசுகையில் "குருத்வார் போன் ற
கொடுமையான சம்பவங்கள் நடக்காமலிருக்க, நா ம் அனைவரும் ஒருமித்த
குரலுடன் சபதம் எடுத்துக் கொள்ளவேண்டும். இத் தாக்குதல் அனைத்து அமெரிக்களினதும் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். இனி மேல் இது போன்று மதவழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடைபெறாதிருக்க அனைத்து வழிகளும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். எந்தவொரு அமெரிக்கரு ம், பொதுவிடங்களில் வழிபாடு நடத்த அச்சம் கொள்ள வேண்டாம்.' என்றார்.

இவ்வாறான வன்முறைகளை ஊக்குவிப்பதற்கு, இழிவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குற்றவாளிகள் எதனால் இவ்வாறு வெறுப்பு கொள்கிறார்கள் என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத போதிலும், உங்களது இந்த முறுக்கப்பட்ட சிந்தனை, அமெரிக்காவின் குடும்பங்கள் இடையே நற்குணம், இரக்க குணம் என்பவற்றுடன் எந்தவகையிலும் தொடர்பற்றது என்பதை நிரூபிக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 5ம் திகதி சீக்கியர் வழிபட்டுத் தலமான குருத்வாரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 சீக்கியர்கள் பலியானது குறிப்பிடத் தக்கது.

0 கருத்துகள்: