தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.1.13

பால்வெளி அண்டத்தில் பூமியின் அளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம்


பால்வெளி அண்டத்தில் மட்டுமே நமது பூமியின் அ ளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்ப தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விண்ணிய லாளர்கள் கூறுகின்றனர்.நமது சூரியனைப் போன்ற அளவு கொண்ட நட்சத்திரங்களை நாசாவின் கெப்ள ர் விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்தது.அப்படி யான நட்சத்திரங்களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறி களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.கலிஃபோ ர்னியாவில் உள்ள அமெரிக்க
விண்ணியல் ஆராய்ச்சிக் குழுமத்தின் முன்பு இ ந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பூமியை ஒத்த அளவில் ஏராளமான கிரகங்கள் இருந்தாலும், இவற்றில் பெரும்பான்மையானவை உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர்.
ஒரு கோளத்தில் உயிர்கள் வாழ்வதற்கு, திரவ வடிவில் நீர் வேண்டும்.
ஆனாலும் ஆயிரங்கோடிக் கணக்கில் பூமியை ஒத்த கிரகங்கள் இருக்கின்றபடியால், பூமியைப் போல உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அம்சங்களைக் கொண்ட கிரகம் ஒன்றை விண்ணியல் நிபுணர்கள் நிச்சயம் கண்டறிவார்கள் என்று பிபிசியிக் அறிவியில் துறை செய்தியாளர் கூறுகிறார்.

0 கருத்துகள்: