சிரிய வன்முறைகளில் பாதிப்புற்ற சுமார் 200 000 இ ற்கும் அதிகமான அகதிகள் அயல் நாடுகளில் தஞ்ச ம்புகுந்துள்ளதாகவும் இதில் 185 000 பேர் வரை இவ் வருட இறுதிக்குள் அகதிகளாக உத்தியோகபூர்வமா கப் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் ஐ.நாவின் அகதி களுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.கடந்த வாரம் ம ட்டும் சுமார் 30 000 அகதிகள் மேலதிகமாக துருக்கி, லெபனான்,ஈராக், மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுக ளில் தஞ்சம் புகுந்திருப்பதாக
அகதிகளுக்கான ஐ.நா இன் பிரிவான UNHCR
தெரிவித்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை ஜெனீவா வில் உள்ள ஐ.நா உறுப்பினரான அட்ரியான் எட்வார்ட்ஸ் சுமார் 202 512 சிரிய அகதிகள் இவ்வலயத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.அகதிகளுக்கான ஐ.நா இன் பிரிவான UNHCR
நேற்றிரவு மட்டும் சுமார் 2200 பொதுமக்கள் சிரிய ஜோர்டான் எல்லையினூடாக ஜோர்டானுக்குள் சென்றுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மட்டும் துருக்கிக்கு 3500 பேர் வரை சென்றுள்ளனர். லெபனானில் மட்டும் இதுவரை 51 000 சிரிய மக்கள் அகதிகளாகப் பதியப்பட்டுள்ளனர்.
இதேவேளை சுமார் 17 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் சிரிய வன்முறைகளில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதமே மிக அதிக மக்கள் பலியான மாதமாகும். அதாவது சிரிய அரச படைகளின் தாக்குதலால் 3700 பொது மக்கள் ஆகஸ்ட்டில் மட்டும் கொல்லப் பட்டுள்ளனர். மேலும் சிரியாவில் ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக நீடித்து வரும் வன்முறையில் இதுவரை 21 000 பொதுமக்கள் வரை கொல்லப் பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக