தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.12.12

சர்வதேச மனித உரிமை நாளன்று எங்களின் மனித உரிமைப் போராட்டம் நடக்கும் : உதயகுமார்


சர்வதேச மனித உரிமை தினமான டிசம்பர் 10 ஆம் தி கதி அன்று, மனித உரிமைகள் மறுக்கப் பட்டதற்கா ன அடையாளமாக கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள், போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.இது குறித்து கூடங்குளம் அணுமி ன் நிலையத்துக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கி ணைப்பாளர்
உதயகுமார் கூறுகையில், "சர்வதேச மனித உரிமைகள் தினத்தன் று, மனித உரிமைகள் மறுக்கப் படும் எங்கள் மக்களோடு, அணு உலைக்கு எதி ரான போராட்டம் நடத்த உள்ளோம். கடல் வழியாக சென்று அணுமின் நிலை யத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட உள்ளோம்.

எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சில கட்சிகளும், அமைப்புக்களும் மதுரை, நெல்லை, தூத்துக்குடி சாலையில் அன்றைய தினம் மறியல் போராட்டமும் நடத்த உள்ளார்கள்"என்று கூறினார். கடந்த 16 மாதங்களாக கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடக் கோரி பலகட்டப் போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது. மேலும், கைது செய்த போராட்டக் காரர்களை குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்து உள்ளதற்கும் அன்றைய தினம் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளனர்.

0 கருத்துகள்: