சிரிய சர்வாதிகாரி பஸர் அல்ஆஸாத்தின் ஆட்சி நா ட்களை எண்ணத் தொடங்கிவிட்டதென்று டென்மா ர்க் பொலிற்றிக்கன் பத்திரிகை தலைப்பு செய்தி வெ ளியிட்டுள்ளது.தற்போது போராளிகள் சிரிய தலை வர் பஸர் அல் ஆஸாத்தின் அதிகார மையம் குவிய ம் பெற்றுள்ள டமாஸ்கஸ் நகரை சுற்றிவளைத்துவி ட்டார்கள்.கழுத்தை சுற்றிய நாகமாக விழுந்துள்ள இ ந்த வளையம் சிரிய அதிபரின் நாட்கள்
எண்ணப்படு வதற்கு சாட்சியமாக்கிவிட்டது. இது ஒருபுறமிருக்க தற்போது சிரியாவில் காணப்படும் கடும் குளிரான காலநிலை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்துள்ளது.
எண்ணப்படு வதற்கு சாட்சியமாக்கிவிட்டது. இது ஒருபுறமிருக்க தற்போது சிரியாவில் காணப்படும் கடும் குளிரான காலநிலை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்துள்ளது.
சுமார் ஏழு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வாழிடங்களை விட்டு வெளியேறியுள்ளார்கள், இவர்களுக்கான உதவிகள் அவசரமாக வழங்கப்பட வேண்டியுள்ளது.
இந்த இக்கட்டான நிலையை உணர்ந்து டென்மார்க் அவசரமாக 50 இலட்சம் குறோணர்களை வழங்கியுள்ளது, அங்கிருந்து செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளை மும்முரமாக நடாத்த இது உதவும்.
மேலும் சிரிய படைகளுக்கும் போராளிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இருந்து பறந்த ஆட்டிலறிகளும், கிரனைட்டுக்களும் அயல்நாடான ஜோர்டானுக்குள் விழ ஆரம்பித்துள்ளது.
இந்தக்குண்டுத் தாக்குதல்களில் ஒரு ஜேர்டானிய படை வீரர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும் கட்டாரில் நடைபெறும் புவி வெப்பமாதலை தடுக்கும் மாநாடு இன்று முடிவடைகிறது.
பலத்த நெருக்கடிகளுக்கிடையில் பேச்சுக்களை நடாத்திய தலைவர்கள் இறுதி இலக்கை பூரணமாக அடையாவிட்டாலும் ஏதோ ஓர் இலக்கை தொடுவர் என்று கூறப்படுகிறது.
புவி வெப்பமாதலை தடுக்கும் பேச்சுக்களில் தலைவர்கள் களைத்து வாடிவிட்டதாக இன்னொரு தகவல் கூறுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக