உலகம் முழுவதும் உள்ள ஆண்களின் வீரியம் கடந்த, 20 ஆண்டுகளாக குறைந்து வருவதாக, பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையில்லா தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுகுறித்து, பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டனர். கடந்த, 20 ஆண்டுகளாக இவர்கள், 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின், விந்துவை பரிசோதித்தனர்.இதுகுறித்து, இவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது
:கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெரும்பாலான ஆண்களின், விந்து துளிகளில், ஒரு மி.மீ.,ரில், 7.36 கோடி விந்தணுக்கள் இருந்தன. ஆனால், தற்போதுள்ள ஆண்களின் விந்துவில், 5 கோடிக்கு குறைவான விந்தணுக்களே உள்ளன. கடந்த, 17 ஆண்டுகளில், உலக அளவில், ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை, 32 சதவீதத்திற்கு அதிகமாக குறைந்து விட்டது.இதற்கு, சுற்றுசூழலும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. விந்துவின் அடர்த்தி தன்மை குறைவின் காரணமாக, பெண்கள் கருத்தரிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.இவ்வாறு, ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக