தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.12.12

ஹமாஸ் இயக்கத்தினரின் 25 ஆவது வருட நிறைவை அனுசரிக்க ஒன்று கூடிய பாலஸ்தீனியர்கள்


பல்லாயிரக் கணக்கான பாலஸ்தீன மக்கள் ஒன்று கூடி ஹமாஸ் இயக்கம் ஆரம்பித்த 25 ஆவது வருட நிறைவைக் கொண்டாடியுள்ளனர்.கொட்டும் அடை மழையையும் பொருட்படுத்தாது காலைப் பொழுதி ல்பாலஸ்தீனியத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக் கணக்கானோர் அல்-கட்டிபா சதுக்கத்தில் மிகப் பெரிய மேடையின் அருகே கூடியிருந்தனர்.இவர்கள்
அனைவரும் பச்சை நிறக் கொடிகளை ஏந்தி யவாறு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் பங்கு பெறுவத ற்காக ஹமாஸ் இயக்கத்தின் நாடு கடந்த தலைவர் காலித் மிஷ்ஆல் எகிப்தி லிருந்து காஸாவுக்கு வெள்ளிக்கிழமையே வந்து சேர்ந்தார். மேலும் இன்று ந டைபெறும் கூட்டத்திலும் பங்கு பெறுவார் எனவும் இக்கூட்டத்தில் உரையாற் றுவார் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.

காஸாவுக்கு தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது முதன் முறையாக விஜயம் செய்துள்ள காலித் மிஷ்ஆல் மீது இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல் தொடுக்கக் கூடாது என இஸ்ரேலிடம் எகிப்து உத்தரவாதம் பெற்ற பின்னரே இவ் விஜயத்துக்கு அனுமதியளித்துள்ளது.
ஹமாஸ் இயக்கம்  தனது அருகிலுள்ள நாடுகளின் முஸ்லிம் சமூகங்களுடன் சகோதரத்துவத்தைப் பேணி வருகின்ற போதும் முன்னால் எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் இன் எதிரியாகக் கருதப் பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்து காஸாவை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினரின் 25 ஆவது வருட நிறைவை சில இஸ்லாமிய மற்றும் அரேபிய பிரதிநிதிகளும் கொண்டாடியுள்ளனர்.

சென்ற மாதம் காஸா ஸ்டிரிப்பில் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடம்பெற்ற மோதலில் 160 இற்கும் அதிகமான பாலஸ்தீனியர்களும், 6 இஸ்ரேலியர்களும் கொல்லப் பட்டிருந்தனர். 8 நாட்களாகத் தொடர்ந்த இந்த வன்முறை எகிப்தினால் மும்மொழியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தையடுத்து (Ceasefire) முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: