எகிப்தில் வெடித்திருக்கம் கலவரங்கள் கடந்த இரண் டு தினங்களில் எல்லைகடந்து போய் வழமைபோல பெரும் உயிரிழப்புக்கள், உடமைகளின் சேதத்திற்கு ள் நுழைந்துள்ளது.அதிபர் மாளிகையை சுற்றி நடந்த போராட்டம் காரணமாக அதிபர் முகமது முர்சி மாளி கையின் பின்புற வழியால் வெளியேற நேருமளவுக் கு நிலமைகள் மோசமடைந்துள்ளன.ஆட்சியில் இரு க்கம் இஸ்லாமிய சகோதரக் கட்சியின் காரியாலய த்தை சுமார் 2000 வரையான பொதுமக்கள் தீயிட்டுக் கொழுத்தியுள்ளார்கள்.எகிப்திய
அரசு கொண்டுவரும் அடிப்படை சட்டங்களுக் கு எதிராக இந்தக் கலவரம் வெடித்துள்ளது, அதிகாரத்தை மறுபடியும் அதிபர் கைகளுக்குக் கொண்டுவரவும், தேர்தல் வெற்றியை முர்சி அரசு பயன்படுத்தி யுள்ளது.
சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கிடம் இருந்து போராடிப் பெற்ற சுதந்திரம் முகமது முர்சி கைக்கு போனதில் இருந்து சுமார் அரைப்பங்கு மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது.
அதிபரின் பெயர் மாறியிருக்கிறதே அல்லாமல் முபாரக்கிற்கும் முர்சிக்கும் பெரிய பேதங்கள் இல்லை என்ற கருத்து ஆர்பாட்டக்காரரின் முகங்களில் தெறிக்கிறது.
அனைத்து கலவரங்களையும் உடன் நிறுத்துங்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுள்ளார், அதிபர் முகமட் முர்சியுடன் அவர் தொலைபேசி வழியாக கதைத்து தமது ஆழ்ந்த கவலைகளை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் கலவரங்கள் திசைமாறி அமெரிக்க எதிர்ப்பாக மாறிவிடும் அபாயம் உள்ளது, முகமதுவை கேலி செய்யும் கலவரத்தில் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு, அமெரிக்க தூதுவரை கொன்ற நிகழ்வு லிபியாவின் பெங்காஸியில் நடந்தது தெரிந்ததே.
எகிப்து என்ற நாடு ஒரேவிதமான மக்கள் கொண்ட நாடல்ல, சதாம் உசேன் போல ஒரு சர்வாதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்த நாடு அந்த நாட்டுக்கு ஜனநாயம் என்பது கழுதைக்கு கற்பூரம் காட்டிய கதை என்பதை இன்றைய நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.
எகிப்து அதிபர் முர்சி தனக்கு தானே பிறபித்து கொண்ட கூடுதல் பொறுப்புகளை ரத்து செய்வதாக கூறியுள்ளார். இதனை அடுத்து கடந்த 30 மணி நேரமாக நடந்து வந்த போராட்டம் முடிவடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எகிப்து அதிபர் முகமது மொர்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனக்கு பெறப்பட்ட கூடுதல் அதிகாரங்களை அளித்த உத்தரவை திரும்ப பெற எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார். வருகிற 15-ந் தேதி நடத்தப்படும் வாக்கெடுப்பில் எதிர்கட்சிகள் பெறும்பான்மை பெற்றாலும், பெறாவிட்டாலும் பொறுப்புகளிலிருந்து தன்னை விடுவித்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை எகிப்து போராட்டதிற்கு 80 பேர் பலியாகியுள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போராட்டத்தை தடுக்க அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் அறிவுறுத்தினர். இதனை அடுத்து எகிப்து அதிபர் மக்களிடம் நேரடியாக தொலைக்காட்சி வழியாக இந்த அறிவிப்பை அளித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக