நான்கு பெண்களை, திருமணம் செய்து, அவர்கள் மூலம் பல குழந்தைகளை பெற்றெடுத்ததால், சீன தலைவர் ஒருவர், பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.சீனாவின், சியோடியான் மாவட்டத்தின், மக்கள் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்தவர் லீ ஜு வென். இவர் சிசான் கிராம குழு இயக்குனராகவும் இருந்தார். இவர் ஏற்கனவே, 3 மனைவிகள் மூலம் 9 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார்.இதற்கிடையே, கடந்த ஆண்டு,4 வது மனைவி மூலம் பிறந்த குழந்தையை, பதிவு செய்ய
முயன்றபோது, கிராம நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது, என்ற சட்டம் அமலில் உள்ளது. ஒரு குழந்தைக்கு மேல் பெறுபவர்கள் கணிசமான அபராதம் கட்ட வேண்டும். ஆனால், லீ, சட்ட விதிகளை மீறி, 9 குழந்தைகளை பெற்றதால், அவர் கட்சி மற்றும் கிராம நிர்வாக குழு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக