உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடகம் காவிரி யில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட்டுள்ளது.ஆனால், நீதிமன்ற அறிவுறுத்தல்படி இல்லாமல், ஒரு நாள் தாமதமாக நேற்று இரவில் இ ருந்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று திறந்து விட வேண்டிய நீரைத் திறக்காமல் ஒரு நாள் தாமதப்படுத்தியதால், ஒரு டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு உடனே வரா மல் போனது.எனவே, 5-ம் தேதி, உச்சநீதிமன்றம் உத் தரவிட்டும், அந்த உத்தரவை
மதிக்காமல், போக்கு காட்டிய கர்நாடக அரசை எதிர்த்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க தமிழகத் தரப்பு தயாராகியுள் ளது. தமிழக வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி.லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் டெல்லிக்கு விரைந்துள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு டெல்லி கர்நாடக பவன் இல்லத்தில் அனைத்துக் கட்சி கர்நாடக எம்.பி.க்களின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். மேலும், பிரதமர் அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு, பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பதற்கு நேரம் கேட்டு அனுமதி கோரியுள்ளார். ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் இதுவரை தரப்படவில்லை.
கர்நாடகாவுக்கு 2-வது நாளாக தமிழக பஸ்கள் செல்லவில்லை
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கர்நாடகத்தில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக மாண்டியா உள்பட பல்வேறு இடங்களில் கடையடைப்பு, போக்குவரத்து நிறுத்தம் ஆகியவை நடைபெற்றது.
மேலும் தமிழக வாகனங்கள் கர்நாடக எல்லைக்குள் செல்ல விடாமல் தமிழக எல்லை பகுதியிலேயே திருப்பி அனுப்பப்படுகின்றன. இதன் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாதேஸ்வரன் மலை, மைசூர், கொள்ளேகால், போன்ற பகுதிகளுக்கு மேட்டூரில் இருந்து கொளத்தூர், கோவிந்தப்பாடி, பாலாறு வழியாக இயக்கப்பட்டு வந்த தமிழக பேருந்துகள் 2-வது நாளாக இயக்கப்படவில்லை.
தமிழ அரசு பஸ்கள் மாதேஸ்வரன் மலை வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு மாதேஸ்வரன் மலையோடு திருப்பி அனுப்பப்படுகிறது. மேலும் இந்த கோவிலுக்கு செல்லும் பேருந்துகள் இரவு நேரங்களில் செல்ல அனுமதிக்காமல் பாலாறுவுடனே திருப்பி அனுப்பப்படுகின்றன.
இந்த சம்பவத்தையொட்டி பாலாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கர்நாடக வனத்துறை செக்போஸ்டில் கர்நாடக மாநில போலீசாரும், பணியில் ஈடுபட்டு தமிழக வாகனங்களை சோதனை செய்த பிறகே செல்ல அனுமதிக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக