National Institute of Health எனப்படும் தேசிய சுகாதார அ மைப்பு ஒன்று சமீபத்தில் எயிட்ஸ் நோய் ஏற்பட்டது போன்றஅறிகுறிகளைக் காட்டும் ஆனால் எயிட்ஸு க்கு சம்பந்தமில்லாத ஒரு வகை நோய் ஆசிய நாடு களில் வாழும் மக்களிடையே பரவி வருவதைக் க ண்டு பிடித்துள்ளனர்.நியூ இங்கிலாந்து ஜர்னல் எனப் படும் மருத்துவ நாளிதழில் நேற்று வியாழக்கிழமை வெளியாகிய இத்தகவலில் எயிட்ஸைப்
போன்றே உடலின் நோய் எதிர்ப்புமண்டலத்தைப் (The Immune System) பாதிக்கக் கூடிய இந்நோய் பரவியுள்ள சில நோயாளிகளை ஆசிய நாடுகளில் இணங்காணப் பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
போன்றே உடலின் நோய் எதிர்ப்புமண்டலத்தைப் (The Immune System) பாதிக்கக் கூடிய இந்நோய் பரவியுள்ள சில நோயாளிகளை ஆசிய நாடுகளில் இணங்காணப் பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இந்த நோய் adult-onset immunodeficiency syndrome எனப் பெயரிடப் பட்டுள்ளது. இதற்கான காரணம் இது சிறுவர்களை அன்றி வளர்ந்தவர்களைத் தாக்குவதனாலாகும். 2004 ஆண்டுக்கு முன்பே இந்நோயால் பாதிக்கப் பட்ட சிலர் அடையாளங் காணப்பட்டிருந்தனர். மேலும் இந்நோயால் பாதிக்கப் பட்ட மிக அதிகமான மக்கள் தாய்லாந்து மற்றும் தைவானைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். NIH அமைப்பு இந்நோய் குறித்து 2005 இல் இருந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.
மிகவும் அரிதாகப் பரவி வரும் இந்நோய் தென் கிழக்கு ஆசியாவை அதிகமாகத் தாக்கியுள்ளது. மேலும் இந்நோயால் பாதிக்கப் பட்ட ஆசிய மக்களின் பரம்பரையில் வந்தவர்கள் அமெரிக்காவில் நோய்ப் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக