தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.8.12

அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பபெட் அறக்கட்டளையில் மோசடி செய்த இந்தியருக்கு 20 ஆண்டுகள் சிறை.


அமெரிக்காவின் கோடீஸ்வர தொழிலதிபரான, வாரன் பபெட் அறக்கட்டளையில் பணிபுரிந்து, ஆயிரக்கணக்கான டாலர்கள் சுருட்டிய இந்தியருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது.உலகின் மூன்றாவது பணக்காரரான, வாரன் பபெட் அறக்கட்டளையில் சர்வதேச மேற்பார்வையாளராக, தாவல் பட்டேல்,38, என்ற இந்தியர் வேலை பார்த்தார். அறக்கட்டளை திட்டங்களை மேற்பார்வையிடுவதற்காக, பல்வேறு நாடுகளுக்கு

இவர் பயணிப்பது வழக்கம்.போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிக்காக, அறக்கட்டளையில் இருந்து பயணப்படி வழங்கப்படும்.
இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்ற, தாவல் பட்டேல், பெரிய ஓட்டல்களில் தங்கியதாக போலி ரசீதுகளை தயாரித்து, அறக்கட்டளையில் இருந்து மோசடியாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஒரே ஆண்டில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பயணப் படியை பெற்றதால், தாவல் மீது, அறக்கட்டளை நிர்வாகத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணை நடத்தியதில், ஓட்டல்களில் தங்காமலேயே போலியாக ரசீதுகளை பெற்று, அறக்கட்டளையில் கணக்கு காட்டி ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம், 25,76,000 ஆயிரம் ரூபாயை அறக்கட்டளையிடம் இருந்து, தாவல் சுருட்டியதாகக் கூறப்படுகிறது. சுருட்டிய பணத்தை திருப்பிச் செலுத்த தாவல் ஒப்புக்கொண்டாலும், அவருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், வரும் நவம்பரில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், தாவலுக்கு அதிகபட்சமாக, 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

0 கருத்துகள்: