லிபியாவின் தலைநகரான திரிபோலிக்கு அருகிலுள்ள சிலிட்டான் பகுதியில் இரண்டு பழங்குடியின கும்பல்களுக்கிடையே மோதல் நடந்தது. அப்போது இரண்டு கும்பல்களை சேர்ந்தவர்களும் பயங்கர ஆயுதங்களுடன் ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிக்கொண்டதில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.ஆனால்பழங்குடியினத்தவருக்கிடையே நடந்த இந்த மோதலுக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
லிபியாவில், அதிபர் முயாமர் கடாபிக்கு எதிராக நடந்த புரட்சியின்போது, அரசுப் படையினரின் ஆயுதங்களைப் புரட்சியாளர்கள் பெருமளவில் கைப்பற்றினர். அப்போதைய போரில் அரசுப் படைகள் தோல்வியடைந்ததால், அந்நாட்டின் ஆயுத பலம் பெருமளவில் குறைந்து போனது. இதேநேரத்தில் அரசுப்படையை ஆதரிப்பதா, அல்லது புரட்சிப்படையை ஆதரிப்பதா என்ற விஷயத்தில் பழங்குடியின மக்களுக்கிடையே பிளவு ஏற்பட்டது. அப்போதிலிருந்தே பழங்குடியின மக்கள் தங்களுக்குள் கும்பல்களை உருவாக்கிக்கொண்டு, ஒருவருக்கொருவர் மோதிவருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக