மும்பை : சமாஜ்வாதி கட்சித் தலைவரான அபூ ஆஸ்மி அவரது தொகுதியில் உள்ள வங்கதேச வாக்காளர்களால்தான் வெற்றி பெற்றார் என ராஜ் தாக்கரே தெரிவித்திருந்தார். இதனை மும்பை ஆஸாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மறுத்துள்ள அபூ ஆஸ்மி, ராஜ் தாக்கரே தன் குற்றச்சாட்டை நிரூபித்தால் 2 கோடி தருவதாக கூறினார்.சமீபத்தில் ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே சமாஜ்வாதி கட்சி தலைவர் அபூ ஆஸ்மியின் தொகுதியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வங்க தேசத்தவர்கள் இருப்பதாகவும் அவர்கள்
ஓட்டளித்ததாலேயே அபூ ஆஸ்மி வென்றதாகவும் கூறினார். மேலும் பொதுக்கூட்ட மேடையில் இருந்து வங்கதேச பாஸ்போர்ட் ஒன்றையும் கூட்டத்தினரை பார்த்து தாக்கரே வீசினார்.
இக்குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அபூ ஆஸ்மி ராஜ் தாக்கரே சொல்வது போல் என் தொகுதியில் வங்க தேசத்தவர்கள் இருப்பதை நிரூபித்தால் 2 கோடி தருவதாகவும் அப்படி நிரூபிக்க முடியவில்லையென்றால் அரசியலை விட்டு ராஜ் தாக்கரே விலக தயாரா என்றும் சவால் எழுப்பியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக