மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்தவர், போலீஸ் கான்ஸ்டபிள் இஸ்ஹாக் தம்போலி. இவர் இஸ்லாமிய வழக்கப்படி தாடி வைத்துக்கொண்டு பணியாற்றி வந்தார்.இந்நிலையில், அவரது மேலதிகாரியான D.C.P., இவரது தாடிக்கு தடை விதித்தார், மேலும் 15 நாள் அவகாசத்தில் தாடியை மழிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.இது குறித்து, மகாராஷ்டிர மாநில "ஜமியியதுல் உலமா" செயலாளர் குல்சார் ஆசமி, மாநில சிறுபான்மை நலத்
துறை அமைச்சருக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், அண்டை மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கிணங்க போலீசார் தாடி வைப்பது தொடர்பான சுற்றறிக்கைகளின் நகல்களையும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆரிப் நசீம் கானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஆவணங்களின் அடிப்படையில், மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீலை சந்தித்தார், சிறுபான்மை அமைச்சர் நசீம். மேலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காமல், மஹாராஷ்டிரா போலீஸ் சார்பில் அடிக்கடி இப்படி தாடிக்கு விதிக்கப்படும் தடையால், முஸ்லிம் போலீசாருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் சஞ்சலம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
மஹாராஷ்டிர காவல் துறையால் அனுப்பட்ட சுற்றறிக்கையை பார்வையிட்டு, அதன் மீது தடை விதித்தார், உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல். இனிமேல், இது போன்ற தாடிக்கு தடை உத்தரவுகள் வராது, என்றும் உறுதியளித்தார், பாட்டீல்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக