எகிப்தில் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதால், பதவியிலிருந்து விலகினார்.போராட்டத்தின் போது பொது மக்களை கொன்று குவித்தது, ஊழல் போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முபாரக், டோராவில் உள்ள சிறைத் துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு உடல் நிலை
மோசமடைந்ததால் ஜூன்19ஆம் திகதி இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவர் இறந்துவிட்டதாக செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
மோசமடைந்ததால் ஜூன்19ஆம் திகதி இராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவர் இறந்துவிட்டதாக செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது முபாரக்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, மீண்டும் டோரா சிறை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக