தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.7.12

காஷ்மீரில் இந்திய அரசின் சித்தரவதைகள்: சனல் 4 அம்பலப்படுத்தியது


இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தற்போது வரை சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகளில் காஷ்மீர் எல்லைப்பிரச்சினையும் ஒன்று என்பதை மறுக்க முடியாது.காஷ்மீரில் அடிக்கடி எல்லையில் துப்பாக்கிச்சூடு என அதிகமான அசம்பாவிதங்கள் நடப்பதால் அம்மாநிலத்தில் அதிகமான  இராணுவப் படைகளை இந்திய அரசு குவித்துள்ளது.இந்நிலையில் இவர்கள் அம்மாநில மக்களின் மீது நடத்திய அத்து மீறிய செயல்கள் அனைத்தையும்
தற்போதுபிரித்தானியாவின் சனல் 4 அம்பலப்படுத்தியுள்ளது.

சனல் 4 வெளிப்படுத்தியுள்ள இந்த காணொளியால் இந்தியா இராணுவ அதிகாரிகள் மிகவும் பயந்துள்ளனர். ஏற்கனவே மன்மோகன் அரசை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வரும் இந்நிலையில் இக்காணொளி வெளியாகியிருப்பது அவருக்கும் ஆபத்தாக இருக்குமென கருதப்படுகின்றது.

இலங்கையின் இறுதிப்போரில் நடந்த போர்குற்றங்களை வெளிப்படுத்தி அந்நாட்டிற்கெதிராக கண்டத்தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வழி வகுத்த சனல் 4 தற்போது இந்தியாவை குறி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: