இந்தோனேசியாவில் விமானப்படை விமானம், குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில், ஆறு பேர் பலியாகினர்.இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், போக்கர் -27 ரக போர் விமானம் வழக்கமான பயிற்சியில் நேற்று ஈடுபட்டிருந் தது. திடீரென இந்த விமானம் ராணுவ குடியிருப்புப் பகுதியில் விழுந்தது.இந்த விபத்தில், எட்டு வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் இருந்த ஆறு பேர் பலியாகினர். விமானத்தில் இருந்த இரண்டு பைலட்கள் உட்பட, ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக