தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.6.12

பிரணாப் முகர்ஜியை நேரடி விவாதத்துக்கு அழைக்கும் பி.ஏ.சங்மா


காங்கிரஸ் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை நேரடி விவாதத்துக்கு வருமாறு பி.ஏ. சங்மா அழைப்பு விடுத்துள்ளார்.நாட் டில் நிலவும் பொருளாதார பின்னடை வு, ஊழல் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கு இந்த ஜனநாய க நாட்டில் பொதுமக்களுக்கு உரிமை உண்டு.நேரடி
விவாதம் ஒன்றில் அவர்கள்இந்நாட்டுக்கு தேவையானவர் யார் என்பதை தெரிவு செய்துகொள்ளலாம். ஜனநாயகம் என்றாலே விவாதமென பொருள்படும். நான் விவாதத்திற்கு அழைக்கிறேன் என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பி.ஏ.சங்மா இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஷிவசேனா தலைவர் பால் தக்கரே ஆகியோரை நேரடியாக சந்தித்து தன்னை ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கபோவதாகவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்: