நீண்ட நாட்களாக மோதலில் ஈடுபட்டு வந்த பாலஸ்தீனம்-இஸ்ரேல் சண்டை ஒரு வழியாக முடிவுக்கு வந்து விடும் என தெரிகின்றது.பாலஸ்தீனத்தின் ஹமாஸ், இனி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை என அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு இஸ்ரேலிடமிருந்து எந்த வகையான பதிலும் இன்னும் வெளிவரவில்லை.இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம்:பாலஸ்தீனத்தின் பல பகுதிகளை மேற்கத்திய நாடுகளின்ஆதரவுடன் இஸ்ரேல்
ஆக்கிரமித்துக்கொண்டது. இந்நிலையில் பாலஸ்தீனத்தில் உருவான ஹமாஸ் என்றொரு அமைப்பு இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை மீட்க தொடங்கியது.
ஆக்கிரமித்துக்கொண்டது. இந்நிலையில் பாலஸ்தீனத்தில் உருவான ஹமாஸ் என்றொரு அமைப்பு இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை மீட்க தொடங்கியது.
இதற்கான போராட்டம் மிகவும் கொடூரமாக நடந்து வந்தது.இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது வான் தாக்குதல், ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்தது.
இந்த சண்டை இரு தரப்பிலும் நடந்து வரும் பட்சத்தில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த சில நாட்களில் மட்டும் பாலஸ்தீனியர் 6 பேரும் இஸ்ரேலியர் ஒருவரும் மற்றும் ஒரு குழந்தையும் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
மேலும் ஹமாஸ் குழுவினரின் பயிற்சிக்களத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். இதன்காரணமாக ஹமாஸ் ராணுவ தளபதிகள் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக