தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.6.12

பிரணாப் முகர்ஜி vs பி.ஏ.சங்மா : நேரடி போட்டியில் சூடுபிடிக்கும் குடியரசு தலைவர் தேர்தல்


குடியரசு தலைவர் வேட்பாளராக பி.ஏ .சங்மாவை ஆதரிக்க போவதாக பார திய ஜனதா கட்சி உத்தியோகபூர்வமா க அறிவித்துள்ளது. அக்கட்சியின் த லைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் நேற்று மா லை டெல்லியில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.இது குறித்து அவர்க
ள் தெரிவிக்கையில் : காங்கிரஸ் தலைவர்கள்
வேட்பாளரை (பிரணாப் முகர் ஜி) தன்னிச்சையாக தெரிவு செய்துவிட்டு எங்களிடம் ஆதரவு கேட்கிறார்கள். வேட்பாளரை தெரிவு செய்யும் முன்னர் எங்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். பிரணாப்புக்கு நாம் ஆதரவளிப்பதில்லை என முடிவெடுத்தோம். ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா பங்குகொள்ள வேண்டும் என்பதற்காக பிரணாப் முகர்ஜிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த முடிவெடுத்தோம். அதனடிப்படையில் பி.ஏ.சங்மாவை தற்போது ஆதரிக்கிறோம். அவருக்கு மமதாவின் ஆதரவை சேர்க்க முயற்சி செய்வோம். ஜனாதிபதி தேர்வில் கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டாலும், மற்றைய விவகாரங்களில் நாங்கள் ஒற்றுமையுடனேயே இருக்கிறோம் என்றனர். 

பாரதீய ஜனதாவின் முடிவு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளதால் பிரணாப்முகர்ஜிக்கும், சங்மாவுக்கும் இடையே நேரடி போட்டி உருவாகி உள்ளது.  சுஷ்மாசுவராஜ் அறிவிப்பின் மூலம் ஐக்கிய ஜனதா தளமும், சிவசேனாவும் கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டன. கம்யூனிஸ்டு கட்சிகள் யாரை ஆதரிப்பது என்று முடிவு செய்வதற்காக டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு உயர்மட்டக்குழு கூட்டம் நடக்கிறது. மம்தா பானர்ஜியும் தனது ஆதரவு யாருக்கு என்பதை இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனக்கு ஆதரவு தருவதாக அறிவித்த பாரதீய ஜனதாவுக்கு பி.ஏ.சங்மா நன்றி தெரிவித்து உள்ளார். நான் இப்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. எனக்கு பாரதீய ஜனதா ஆதரவு அளித்து இருப்பது மகிழ்ச்சி அளித்து இருக்கிறது. இதற்காக அந்த கட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே எனக்கு ஆதரவு தெரிவித்து இருந்த அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் கட்சிகளுக்கும் நன்றி. மம்தா பானர்ஜியும் எனக்கு ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறேன். என்றார்.

இதேவேளை மத்திய அமைச்சராக இருக்கும் பி.ஏ.சங்மாவின் மகள் அகதா சங்மாவும் தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பி.ஏ.சங்மா அக்கட்சியிலிருந்து பதவி விலகினார்.

ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இதற்காக கடந்த 16-ந்தேதி தொடங்கிய மனுதாக்கல் வருகிற 30-ந்தேதியுடன் முடிவடைகிறது. காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 

0 கருத்துகள்: