பாகிஸ்தானின் புதிய பிரதமராக ராஜா பர்வேஷ் அ ஷ்ராப் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டு ள்ளார்.ஆளும் கட்சியின் முன்னாள் நீர் மற்றும் மின் சக்தி துறை அமைச்சரான இவர் பாகிஸ்தானின் 25 வது பிரதமராக தெரிவாகியுள்ளார். பிரதமர் பதவிக்கு இரண்டாவது தெரிவாக, ஜனாதிபதி சர்தாரியால் இணங்காணப்பட்டுள்ள அஷ்ராபுக்கு வயது 65. இவர் முன்னர் மின்சக்தி துறை அமைச்சராக இருந்த போ து ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பதவியை ராஜினாமா செய்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம்
மீண்டும் கட்சியில் இணைந்ததுடன், தகவ ல் தொழில்நுட்ப துறை அமைச்சராக தெரிவானார். பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் யூசுப் கிலானி நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்று பதவியிலிருந்து விலக்கப்பட்டதை தொடர்ந்து அப்பதவிக்கு மக்தூம் சஹபுதீன் பரிந்துரைக்கப்பட்டார். எனினும் அவரும் சுகாதார துறை அமைச்சராக இருந்த போது ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. இதை தொடர்ந்தே தற்போது ராஜா பர்வேஷ் அஷ்ராப் பிரதமராகியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக