அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர் டாமல் இருந்து புறப்பட்டு வந்தது. அதில் பயணம் செய்த பயணிகளுக்கு சாண்ட்விச் உணவு வழங்கப்பட்டது. அதில், தையல் ஊசிகள் இருந்ததை பயணி ஒருவர் கண்டுபிடித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் இந்த உணவு அனைத்து பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த தகவல் அனைத்து அமெரிக்க விமானங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இயைடுத்து பயணிகளுக்கு வழங்கப்பட்ட சாண்ட்விச்களில் சோதனை நடத்தப்பட்டது. அவற்றில் 3 அட்லாண்டா விமான பயணிகளுக்கு வழங்கப்பட்டவைகளில் ஊசிகள் இருந்தன. இதற்கிடையே சாண்ட்விச் சாப்பிட்ட ஒரு பயணியின் தொண்டையில் ஊசிகுத்தி காயம் ஏற்பட்டது. உடனே அவருக்கு டாக்டர் சிகிச்சை அளித்தார்.
அச்சம்பவம் அமெரிக்க விமான பயணிகளிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உணவு வகைகளை ஆம்ஸ்டர் டாமில் உள்ள கேட் கார்மெட் என்ற நிறுவனம் தயார் செய்து வழங்கியுள்ளது. எனவே, இந்த நிறுவனத்திடம் அமெரிக்க உணவு நிறுவனமும், நெதர்லாந்து அதிகாரிகளும் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக