சென்னை: இன்று நடைபெற்று வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலி தா சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தி ல் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்க ளிக்கிறார்.குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று கா லை 10 மணிக்கு துவங்கியது. இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான
பிரணாப் முகர்ஜிக்கும்,தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சி களின் ஆதரவோடு போட்டியிடும் சங்மாவுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. கடந்த மாதம் 21ம் தேதியில் இருந்து கொடநாட்டில் இருந்த முதல்வர் ஜெயலலிதா குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக நேற்று பிற்பகல் சென்னை வந்தார்.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக சட்டசபை குழு கூட்ட அரங்கில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் ஜெயலலிதா, அமைச்சர்கள் உள்பட 234 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கின்றனர். மேலும் சென்னையில் வாக்களிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ள 15 எம்.பி.க்களும் தலைமைச் செயலகத்தில் வாக்களிக்கின்றனர்.
வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து வரும் 22ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். ஜெயலலிதா இன்று வாக்களித்த பிறகு மீண்டும் கொடநாடு செல்கிறார். இன்னும் சில நாட்கள் அவர் அங்கு தான் இருப்பார் என்று கூறப்படுகிறது.
நன்றி: தட்ஸ்தமிழ்
நன்றி: தட்ஸ்தமிழ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக