தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.4.11

ஹிந்துத்துவா பயங்கரவாதத்தை காங்கிரஸ் கட்சிக்கு புரியவைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டது – திக் விஜய்சிங்

புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக இந்தியாவில் நடந்துள்ள பயங்கரவாத செயல்கள் குறித்து காங்கிரஸ் கட்சிக்கு புரியவைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டதாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியும், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருமான சுனில்ஜோஷியின் கொலைத் தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம்(என்.ஐ.ஏ) ஒப்படைக்க மறுக்கும் மத்தியபிரதேச பா.ஜ.க அரசை திக்விஜய்சிங் விமர்சித்துள்ளார். செய்தி நிறுவனமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்பெக்டரம் 2ஜி வழக்கு குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் - முக்கிய முடிவெடுக்க இன்று கூடுகிறது திமுக ?


ஸ்பெட்ரம் 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகார வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்றுள்ள பரபரப்பான சூழ்நிலையில்,
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 27) சென்னையில் கூடுகிறது.
2ஜி அலைக்கற்றை வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி,

2011 இன் Great Escape! : கந்தஹார் சிறையிலிருந்து தலிபான்கள் தப்பியது இப்படித்தான் (படங்கள்)


தெற்கு ஆப்கானிஸ்த்தானில் உள்ள கந்தஹார் சிறையிலிருந்து 476 தலிபான் கைதிகள், 360 மீட்டர் சுரங்கம் தோண்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பிச்சென்றனர். ( படங்கள் )
எந்தவித உயிர்ச்சேதமும் இன்றி ஐந்து மணித்தியாலங்களாக இந்த தப்பிச்செல்லல் நடவடிக்கை நடந்தது. எனினும் காவலிலிருந்த ஆப்கான் படையினருக்கு அவர்கள் தப்பிச்சென்று மூன்று மணித்தியாலங்கள் வரை என்ன நடந்தது என்றே தெரியாது.
2008ம் ஆண்டு, தற்கொலை குண்டு தாக்குதல் மூலம், நூற்றுக்கணக்கான தலிபான்கள் சிறையிலிருந்து தப்பிச்சென்ற பிறகு தலிபான்களுக்கு மீண்டும் பாரிய வெற்றியை தேடித்தந்த சம்பவமாக இது மாறியுள்து.

மகரஜோதி இயற்கையானது - மகரதீபம் ஏற்றப்படுவது - நீதி மன்றத்தில் சபரிமலை தேவஸ்தான நிர்வாகம்


சபரிமலையில் வருடம் தோறும் மகர சங்கிராந்தி தினத்தன்று  வானில் தெரியும் மகர ஜோதி என்பது இயற்கையானது என்றும், பொன்னம்பலமேட்டில் தெரியும் மகர தீபம் மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும் திருவாங்கூர் தேவஸ்தானம்  தெரிவித்திருக்ககிறது. கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி புல்மேடு பகுதியில் நின்று மகர ஜோதியை தரிசித்த  பக்தர்கள் திரும்பியபோது ஏற்பட்ட   நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பலியான சம்பவம் தொடர்பில்  கேரள  உயர் நீதிமன்னறத்தில்  பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இவ்வாறு தொடரப்பட்ட ஒரு

இலங்கை மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க் குற்றம்: ஐ.நா நிபுணர் குழு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது


sri-lanka-2
வாஷிங்டன்:இலங்கை மற்றும் விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
214 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தணிக்கைச் செய்யப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் ஆகியோரின் போர் குற்றங்கள் இவ்வறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் அனைத்து போர்விதிமுறைகளையும் இலங்கை

எஸ்.எம்.எஸ் மூலம் சமையல் கேஸ் பதிவு


சென்னை, எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கேஸ் பதிவு செய்வதற்கு 10 இலக்க தொலைபேசி எண்ணை இண்டேன், எச்.பி. கேஸ் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. இதன்மூலம் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்கள் கேசுக்கு பதிவு செயலாம்.
8124024365 என்ற பத்து இலக்க எண்ணில் இன்டராக்டிவ் வாய்ஸ் சிஸ்டம் மூலம் இதில் 24 மணி நேரமும் கேசுக்கு பதிவு செய்யலாம். மேலும் இந்த 10 இலக்க

26.4.11

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் சிபிஐ அத்வானியை பாதுகாக்க முயல்கிறது


aimlb
ஹைதராபாத்:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளை மறைப்பதற்கு சிபிஐ முயல்வதாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐ பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் நத்தை வேகத்தில் செயல் படுவதாகவும் ஆதாரங்களை மறைக்க முயல்வதாகவும் தெரிவித்தனர்.  அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் நடுவண் அரசிற்கும் சிபிஐ ன் இயக்குனருக்கும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கவும் இவ்வழக்கில் மனுதாரராக

ஹஸாரேவின் போராட்டம் ஆர்.எஸ்.எஸ்ஸை பாதுகாப்பதற்காக


121216298
புதுடெல்லி:இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் தொடர்பு வெளியானதைத் தொடர்ந்து அதுத்தொடர்பான விவாதங்களை முடிவுக்குக் கொண்டுவரத்தான் அன்னா ஹஸாரே ஊழலுக்கெதிரான போராட்டத்தை நடத்தினார் என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.
ஹஸாரேவை புதிய காந்தியாகவும்

சாமியார் முதல் ஊழல் ஒழிப்பு (அன்னா ஹசாரே)வரை எல்லாமே போலி!!

 அன்னா ஹசாரே என்பவர் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டவர் என்பது போல ஒரு மாயத் தோற்றம் தோன்றும். அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். சங்கரலிங்கனார், பொட்டி சிறிராமுலு, திலீபன் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்கள். அவர்களை எல்லாம் இந்த நாடு கண்டு கொள்ளவில்லை.

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தால் மட்டும் ஏன் மத்திய அரசு இப்படித் தலைவணங்குகிறது? ஊழல் ஒழிப்பு என்பது சட்டப் பிரச்சினை அல்ல சமூகத்தை ஒட்டிய பிரச்சினை.

ஹசாரே குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி பூஷன்,

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது


துபாய், ஏப். 25- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது.
துபாய் நகரை தலைநகரமாக கொண்ட யாஷ்சாட் என்கிற செயற்கைக் கோள் தொடர்பு நிறுவனம் தான் ஒய்1 ஏ என்கிற இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. பிரஞ்சு கயானா நாட்டில் உள்ள கோரூ என்கிற இடத்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின்

கடாபியின் அரச மாளிகை மீது நேட்டோ படைகள் கடும் குண்டுவீச்சு தாக்குதல்கள் : 45 பேர் படுகாயம்


லிபிய அதிபர் மௌம்மர் கடாபியின் பாப் அல் அசிசியாஹ் கோட்டையை குறிவைத்து இன்று திங்கட்கிழமை
 அதிகாலை நேட்டோ படைகள் கடும் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டன.

சில மணி நேரங்கள் நீடித்த இத்தாக்குதல்களில் பப் அல் அசிசியாஹ் கட்டிடம் கடும்

சாய்பாபா மரணம் குறித்து தஸ்லிமா நஸ்ரின் விமர்சனம்


சாய்பாபாவின் மரணம் குறித்தும், இதற்காக கிரிக்கெட் விளையாடாமல் பிரார்த்தனை செய்வதாக அறிவித்த சச்சின் டெண்டுல்கர் குறித்தும் விமர்சனம் செய்து, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்.
தஸ்லிமாவின் எழுத்துக்களை விட அவரது சர்ச்சைப் பேச்சுக்களும், கருத்துக்களும்தான் பிரபலமாக உள்ளது. அவரது லஜ்ஜா என்ற நூல் வங்கதேச மதவாதிகளின் ஆத்திரத்தைக் கிளப்பியதால் அவருக்கு மதவாதிகள் பாத்வா விதித்தனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி தலைமறைவான தஸ்லிமா பல நாடுகளில் தஞ்சமடைந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

ஆப்கானின் கந்தகார் சிறையிலிருந்து 540 தலிபான்கள் தப்பினர்! : அமெரிக்க படைகளுக்கு ஏமாற்றம்

ஆப்கானிஸ்த்தானின் கந்தகார் சிறையிலிருந்து, தலிபான்களின் முக்கியத தளபதிகள் உட்பட சுமார் 540 க்கு மேற்பட்ட கைதிகள் எவ்வித உயிரிழப்புக்களுமின்றி தப்பியுள்ளதாக ஆப்கானிய அரசு தகவல்களும், தலிபான்களின் ஊடகத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளன.இரவோடு இரவாக சுமார் 320 நீளமான குகை ஒன்றினூடாக  இவர்கள் தப்பியுள்ளதுடன், இது நன்கு யோசனை செய்து செயற்படுத்திய திட்டமெனவும் தெரியவந்துள்ளது.

தலிபான் போராளிகளால் சிறைக்கு வெளியிலிருந்து

25.4.11

டெல்லியில் வக்ஃப் கட்டிடங்களின் வாடகை ஒரு ரூபாய் முதல் 11 வரை


812577998
புதுடெல்லி:கட்டிட வாடகை டெல்லியில் இந்தியாவின் இதர நகரங்களை விட பெருமளவு அதிகரித்துவரும் நிலையில் அங்குள்ள வக்ஃப் சொத்துக்களுக்கு மாதாந்திர வாடகை வெறும் ஒரு ரூபாய் முதல் 11 வரை அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியில் நிஜாமுத்தீன், கரோல்பாக், பஹார்கஞ்ச், சப்ஜிமண்டி, பல்லிமாரன், மாத்தியமஹல், பழைய டெல்லியின் வீதிகள்

ஸ்கைப் உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை


இணையத்தில் அரட்டையில் தெளிவான வாய்ஸ் ஐ பெறுவதற்காகவும் இன்னும் சில காரணங்களுக்காகவும்
மிகவும் பிரபலமான ஸ்கைப் எனும் மென்பொருளை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

மேம்படுத்தப்பட்ட ஸ்கைப் மென்பொருளின் வடிவம் அதில் இருக்கின்ற ஏராளாமான வசதிகள் பலருக்கு எரிச்சலைத்தரும்.

அத்துடன் ஸ்கைப்பை கையாள்வதற்கும் இலகுவாக இருப்பதில்லை. 

உளவுத்துறையா? களவுத்துறையா?

APRIL 24, புதுடெல்லி: குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வுக்குழு சாட்சிகளை மிரட்டியுள்ளது.

மேலும் புலனாய்வுத் தொடர்பான விபரங்களை குஜராத் அரசுக்கு கசியச் செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணப்பத்திரத்தில் ஐ.ஜி.சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலங்களை பதிவுச்

பீமாப்பள்ளி துப்பாக்கிச்சூடு:மறு விசாரணைக்கு உத்தரவு


evidence
திருவனந்தபுரம்:பீமா பள்ளி துப்பாக்கிச்சூடு தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக க்ரைம் ப்ராஞ்ச் போலீஸார் விசாரணை நடத்தியபிறகு கைவிடப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ள கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க திருவனந்தபுரம் ஜூடிஸியல் முதன்மை வகுப்பு மாஜிஸ்ட்ரேட்(இரண்டு) எ.எம்.பஷீர் க்ரைம் ப்ராஞ்சிற்கு உத்தரவிட்டுள்ளார்.
2009 மே 17-ஆம் தேதி

ஆளில்லாவிமானத்தாக்குல்:எதிர்ப்பு தெரிவித்து இம்ரான் கான் தர்ணா போராட்டம்


imran khan
இஸ்லாமாபாத்:வடக்கு வஸீரிஸ்தானில் அமெரிக்காவின் அடாவடித் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பெஷாவரில் தெஹ்ரீக்-இ-இன்ஷாப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாக்.கிரிக்கெட் அணியின் கேப்டனுமான இம்ரான்கான் இரண்டு தின தர்ணா போராட்டத்தை துவக்கியுள்ளார்.
அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆதரவாளர்களுடன் இம்ரான்கான்

காவிமயம்:குஜராத்தின் வழியை பின்பற்றும் மத்திய பிரதேசம்


shivraj-singh-chauhan-13703
புதுடெல்லி:மத்தியபிரதேச மாநில பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து பகவத் கீதையை பாடதிட்டத்தில் இடம்பெறச் செய்ய உள்ளனர்.
2003-ஆம் ஆண்டு பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு கல்வி துறையை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ சிறுபான்மையினரின்

24.4.11

துபாயில் வெகுசிறப்பாக நடைபெற்ற “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்” நிகழ்ச்சி


Audience
எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) ஏற்பாடு செய்திருந்த “ஆரோக்கியமான இஸ்லாமிய குடும்பம்” என்ற குடும்ப நிகழ்ச்சி 22.04.11 வெள்ளியன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஷார்ஜாவிலுள்ள ரையான் ஸ்டார் இண்டர்நேஷனல் ஸ்கூலில் நடைபெற்ற இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்குபெற்று பயனடைந்தனர்.
முன்னதாக, திருமறை வசனங்களை ஓதி சகோ. அப்துல் கஃபூர் அவர்கள்