இவ்வாறு தொடரப்பட்ட ஒரு
வழக்கில்; 1999-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி நடந்த நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலியானது பற்றி விசாரணை நடத்திய டி.சந்திரசேகர மேனன் கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட கோர்ட்டு உத்தரவிட வேண்டும். அது போன்ற துயர சம்பவம் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். புல்மேடு பகுதியில் இந்த ஆண்டு நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலியான சம்பவம் பற்றி கேரளா அரசு விசாரணை நடத்தாமல் விலகி இருக்கிறது. அதுபற்றி விசாரணை நடத்தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

மற்றுமொரு வழக்கில்; சபரிமலை சீசனுக்காக போலீசார், வனத்துறையினர், மின்சார வாரிய ஊழியர்கள், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களை பயன்படுத்துவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது எனத் தெரிவிக்கப்பட;டு, அதற்குத் தடைவிதிக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இவ்வாறு தொடரப்பட்ட வழக்குகளில் தொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி சபரிமலை தெவஸ்தான நிரவாகமாகிய தேவசம்போர்ட்டுக்கு கேர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி திருவாங்கூர் தேவசம் போர்டு செயலாளர் ஆர்.அனிதா கொச்சி இரண்டு பதில் மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவில்; மகர சங்கராந்தி தினத்தில் பொன்னம்பலமேடு பகுதியில் வானத்தில் தெரியும் மகர ஜோதி ஒரு நட்சத்திரம். அது இயற்கையாக தோன்றும் அதிசயம். மனிதர்களால் ஏற்றப்படுவது அல்ல. மகர ஜோதி வானத்தில் தோன்றும் அதே நேரத்தில் பொன்னம்பல மேட்டில் சிறப்பு தீபாராதனை நடைபெறும் போது மகர தீபம் பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுகிறது. அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான். காலம் காலமாக இது நிகழ்கிறது. அவ்வாறு ஏற்றப்படும் மகர விளக்கு தெய்வீகமானது என்று தேவசம்போர்டு கூறியதில்லை. அது பக்தர்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம் என்பதால் மகர விளக்கு ஏற்றப்படுவதை தடை செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக