தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.4.11

2011 இன் Great Escape! : கந்தஹார் சிறையிலிருந்து தலிபான்கள் தப்பியது இப்படித்தான் (படங்கள்)


தெற்கு ஆப்கானிஸ்த்தானில் உள்ள கந்தஹார் சிறையிலிருந்து 476 தலிபான் கைதிகள், 360 மீட்டர் சுரங்கம் தோண்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பிச்சென்றனர். ( படங்கள் )
எந்தவித உயிர்ச்சேதமும் இன்றி ஐந்து மணித்தியாலங்களாக இந்த தப்பிச்செல்லல் நடவடிக்கை நடந்தது. எனினும் காவலிலிருந்த ஆப்கான் படையினருக்கு அவர்கள் தப்பிச்சென்று மூன்று மணித்தியாலங்கள் வரை என்ன நடந்தது என்றே தெரியாது.
2008ம் ஆண்டு, தற்கொலை குண்டு தாக்குதல் மூலம், நூற்றுக்கணக்கான தலிபான்கள் சிறையிலிருந்து தப்பிச்சென்ற பிறகு தலிபான்களுக்கு மீண்டும் பாரிய வெற்றியை தேடித்தந்த சம்பவமாக இது மாறியுள்து.

தப்பியவர்களில் நூற்றுக்கு மேற்பட்டோர், அமெரிக்க படைகளினால் கடும் முயற்சியின் பின் கைது செய்யப்பட்ட போர்த்தளபதிகள் என்பது அமெரிக்காவுக்கு மேலும் கோபத்தை கிளறிவிட்டுள்ளது.

கந்தகார் சிறைச்சாலையின், அதியுயர் பாதுகாப்பு வலய செல்களில் ஒன்றின் நிலப்பகுதிக்கு தான் வெளியிருந்தான குகை குடையப்பட்டுள்ளது.
இச்செல்லுக்கு வருவதற்காக போலிச்சாவிகள் கொடுக்கப்பட்டதால் இலகுவாக மற்றவர்களும் தங்களது செல்களிருந்து வெளியேறி அதே குகையின் வழியே வெளியேறியுள்ளனர். இவ்வாறு வெளியேறிய ஒருவர் பிபிசிக்கு பேட்டியும் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் நடைபெற்ற போது அருகில் உள்ள மற்றைய தடுப்பு முகாமில் நேட்டோ படைகள் காவலுக்கு நின்றதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து, அதிர்ச்சி வெளியிட்டுள்ள, ஆப்கானில் உள்ள பிரிட்டிஷ் படைகளின் கேனல் ரிஷாட் கெம்ப், அமெரிக்க, இங்கிலாந்து ஆப்கான் மற்றும் ஏனைய கூட்டுப்படைகள் கஷ்ட்டப்பட்டு, தங்களது உயிரை பணயம் வைத்து, தலிபான்களை கைது செய்தால், இப்படி கவனயீனமாக அவர்களை தப்பவிடுகிறீர்கள்! மீண்டும் இவர்களை பிடித்து தர நம்மால் முடியாது என ஆதங்கப்பட்டார்.

ஆனால், தப்பிய  தலிபான் போராளிகள் 65 பேரை மீண்டும், பிடித்துவிட்டதாகவும், மற்றவர்களையும் தீவிரமாக தேடி வருவதாகவும் ஆப்கான் இராணுவ அதிகாரிகள் இப்போது தெரிவித்துள்ளனர்.
படங்கள் : மெயில் ஆன்லைன்






0 கருத்துகள்: