சென்னை, எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கேஸ் பதிவு செய்வதற்கு 10 இலக்க தொலைபேசி எண்ணை இண்டேன், எச்.பி. கேஸ் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. இதன்மூலம் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்கள் கேசுக்கு பதிவு செயலாம்.
8124024365 என்ற பத்து இலக்க எண்ணில் இன்டராக்டிவ் வாய்ஸ் சிஸ்டம் மூலம் இதில் 24 மணி நேரமும் கேசுக்கு பதிவு செய்யலாம். மேலும் இந்த 10 இலக்க
எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் கேசுக்கு பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ததும், அது தொடர்பான எஸ்எம்எஸ் வாடிக்கையாளரின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும். இதுபற்றிய மேலும் விவரங்களை www.indane.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இதேபோல எச்.பி. கேஸ் வாடிக்கையாளர்கள் 9092223456 என்ற எண் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். முறையை தொடர்ந்து ஆன் லைன் மூலம் பதிவு செய்யும் முறையும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக