அதிகாலை நேட்டோ படைகள் கடும் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டன.
சில மணி நேரங்கள் நீடித்த இத்தாக்குதல்களில் பப் அல் அசிசியாஹ் கட்டிடம் கடும்
கடாபியின் கோட்டை என வர்ணிக்கப்படும் திரிபொலியில், நேட்டோ படைகள் அண்மைக்காலமாக தமது தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருந்தன.
அரச தரப்பினார் 'கார் பார்க்' என கூறப்பட்ட ஒரு இடத்தில், பாதுகாப்பான பதுங்கு குழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நேட்டோ படைகள் அதன் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன.
இந்நிலையில், தாக்குதலுக்காக அணிவகுத்து நின்ற கூட்டுப்படை விமானம் ஒன்று முதன்முறையாக கடந்த சனிக்கிழமை தீப்பற்றிக்கொண்டது. இது நேட்டோ படைகளுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.
கடாபி படையினர் வசமிருந்த மிஸுருட்டா நகரம், புரட்சிப்படையினரின் கடுமையான தாக்குதல்களை அடுத்து, அவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் திரிபொலியில் தொடர்ந்து கடும் தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக