ஆப்கானிஸ்த்தானின் கந்தகார் சிறையிலிருந்து, தலிபான்களின் முக்கியத தளபதிகள் உட்பட சுமார் 540 க்கு மேற்பட்ட கைதிகள் எவ்வித உயிரிழப்புக்களுமின்றி தப்பியுள்ளதாக ஆப்கானிய அரசு தகவல்களும், தலிபான்களின் ஊடகத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளன.இரவோடு இரவாக சுமார் 320 நீளமான குகை ஒன்றினூடாக இவர்கள் தப்பியுள்ளதுடன், இது நன்கு யோசனை செய்து செயற்படுத்திய திட்டமெனவும் தெரியவந்துள்ளது.
தலிபான் போராளிகளால் சிறைக்கு வெளியிலிருந்து
சுமார் 5 மாதங்களாக திட்டமிடப்பட்டு குறித்த குகை கட்டப்பட்டுள்ளது.
நேற்றிரவு 11.00 மணியிலிருந்து அதிகாலை 3.30 மணிவரை, இக்குகை வழியாக முஜாஹிடீன் போராளிகள் வெளியேறினர். பின்னர் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தலிபான்களின் வாகனங்களில் ஏறி தப்பிச்சென்றுள்ளனர்.
இந்நடவடிக்கையின் போது எந்தவித சண்டையும் இடம்பெறவில்லை எனவும், குறித்த கைதிகள் தப்பிவிட்டதாக 4 மணி நேரத்தின் பின்னரே காவற்துறைக்கு தெரியவந்துள்ளது எனவும் தலிபான் பேச்சாளர் யூசுப் அஹ்மாடி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தப்பியவர்களில், அமெரிக்க படைகள் கடும் முயற்சி செய்து கைது செய்திருந்த 106 தலிபான் கட்டளை அதிகாரிகளும் அடக்கம் என்பது வருத்தத்திற்குரியது.
கடந்த 2008 ஜூன் மாதம், இவ்வாறானதொரு தப்பிச்செல்லல் நடவடிக்கையில் இரு தற்கொலை தாக்குதல்கள் மேற்கொண்டு, சுமார் 1,150 கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர். இதன் போது போலிஸாருடன் கடும் துப்பாக்கி பிரயோகம் ஏற்பட்டதுடன் 16 போலீசார் மரணமாகியிருந்தனர்.
அந்த சம்பவத்திற்கு பிறகு தலிபான்களுக்கு மிகப்பெறும் வெற்றியை தேடித்தந்த நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக