தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.4.11

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது


துபாய், ஏப். 25- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது.
துபாய் நகரை தலைநகரமாக கொண்ட யாஷ்சாட் என்கிற செயற்கைக் கோள் தொடர்பு நிறுவனம் தான் ஒய்1 ஏ என்கிற இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. பிரஞ்சு கயானா நாட்டில் உள்ள கோரூ என்கிற இடத்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின்
ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படடது. இதை ஏரியான் 5ராக்கெட் சுமந்து சென்றது. அபு தாபி நேரப்படி இரவு 1.37 மணிக்கு அது விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்த 9 நாட்களில் இந்த செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையை அடையும். அது 15 ஆண்டுகள் பூமியை சுற்றி வரும்.

0 கருத்துகள்: