தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.4.11

ஆளில்லாவிமானத்தாக்குல்:எதிர்ப்பு தெரிவித்து இம்ரான் கான் தர்ணா போராட்டம்


imran khan
இஸ்லாமாபாத்:வடக்கு வஸீரிஸ்தானில் அமெரிக்காவின் அடாவடித் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பெஷாவரில் தெஹ்ரீக்-இ-இன்ஷாப் கட்சியின் தலைவரும், முன்னாள் பாக்.கிரிக்கெட் அணியின் கேப்டனுமான இம்ரான்கான் இரண்டு தின தர்ணா போராட்டத்தை துவக்கியுள்ளார்.
அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆதரவாளர்களுடன் இம்ரான்கான்
போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைபுரிந்தார். எல்லா எதிர்கட்சியினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார். ஆளுங்கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்டி, முத்தஹிதா குவாமி இயக்கம், அவாமி நேசனல் கட்சி ஆகியவற்றை இம்ரான் கான் போராட்டத்திற்கு அழைக்கவில்லை.
மக்கள் கூட்டங்கூட்டமாக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு இரவிலும் வருகை தருகின்றனர். நேட்டோ வாகனங்களை தடுப்பதும் எதிர்ப்பாளர்களின் போராட்ட திட்டத்தில் அடங்கியுள்ளது. அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நிற்கும் வஸீரிஸ்தானில் ஷம்ஸி விமான நிலையத்திலிருந்து அமெரிக்க ராணுவத்தினரை பாகிஸ்தான் அகற்றிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இங்குள்ள செயல்பாடுகளை நிறுத்திவைக்க பாகிஸ்தான், அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இச்செய்தியை ரகசிய புலனாய்வு அதிகாரியை மேற்கோள்காட்டி என்.பி.சி வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்: