தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.12.12

வான்வெளியில் ஒளிப்பிழம்புகள்! பீதியில் மக்கள்.


இலங்கை நாட்டின் பல பாகங்களிலும் இரவு வே ளைகளில் தென்பட்டபறக்கும் கற்கள் அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் தெரிவித்துள்ளார்.கம்பஹா, சிலாபம், அநுராதபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் பறக்கும் ஒளிக்கற்க ளை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருந்து ள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்ப டுகிறது.இது தொடர்பில் விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் கூறுகையில், குறித்த ஒளிப்பிழம்பினை கண்காணிக்கும் முகமாக 24 மணிநேர சேவையில் விமானப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது வான்பரப்பு மழுவதுமாக அவதானிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்காக விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரையில் ஒளிப்பிழம்பினை விமானப்படையினரால் காணமுடியவில்லை. ஏனெனில் ஓளியாக மட்டும் தென்படுவதால் அது விமானப்படையின் ராடர் கருவிகளில் பதிவாகும் வாய்ப்புக்கள் குறைவு. மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்றும் இது தொடர்பில் அவதானிக்கின்றது. குறித்த ஒளிப்பிழம்பு ஒரு கோளாக இருக்கலாம் எனவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது. எனவே மக்கள் வீணாக அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
இதேவேளை வியாழன் கோளுக்கு அண்மையில் புதிய கோளொன்று வெடித்துச் சிதறியதில் பறக்கும் கற்கள் எனப்படும் அஸ்டரொய்ட்டுக்கள் அண்டவெளியில் சுற்றுவதாக நாசா தெரிவித்திருந்தது. இந்த பறக்கும் கற்கள் புவியீர்ப்பின் காரணமாக பூமியில் விழலாம் ஆனால் அவை எவ்வித ஆபத்தினையும் விளைவிக்காது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: