குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தை சிறப்பா க செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள் ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள் ளார்.நாடாளுமன்றத்தின் மக்களவையில் பொருளா தாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் பற்றி ப.சிதம்ப ரம் உரை நிகழ்த்திய போதே இவ்வாறு தெரிவித்தார் .மேலும் அவர் பேசுகையில், நாட்டின் பொருளாதரத் தை மீட்டெடுக்கும் முயற்சிகள் இன்னும் ஒரு வருட த்தில் பலன் அளிக்கும். இதுபோலத் திட்டங்கள் பல இனி வரும் வாரங்களில்
அறிவிக்கப்படும். நாட்டின் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் 13 கோடி குழந்தைகள் பசியாறுகிறார்கள். பள்ளிகளில் வழங்கப்படும் குழந்தைகளுக்கான இந்த மதிய உணவுத் திட்டத் தை தமிழகம் வெகு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறது. கர்மவீரர் காமராஜர் தமிழகத்தில் துவக்கி வைத்த இந்த மதிய உணவுத் திட்டத்தை, அடுத்தடுத்து பதவி ஏற்றுக் கொள்ளும் தமிழக முதல் அமைச்சர்கள் தொன்றுதொட்டு செவ்வனே செய்து வருகிறார்கள் என்றும் புகழ்ந்து பேசியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக