தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.12.12

அமெரிக்காவை மீண்டும் உலுக்கியுள்ள துப்பாக்கிச்சூடு : பலியானோரில் 20 பேர் பள்ளிக் குழந்தைகள்


அமேரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் உள்ள சி றார் பள்ளி ஒன்றில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர். இதில் 5 இலிருந்து 10  வயதுக்குட்பட்ட 20 பச்சிளம் சிறார்க ளும் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.நியூடவுனில் அமைந்துள்ள Sandy Hook Elem entary பள்ளியில் இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந் துள்ளது.
மூளையளவில் பாதிக்கப்பட்ட Adam Lanza எனும் 20 வயது இளைஞர்
ஒருவரே இத்துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தியி ருப்பதுடன், அவரும் இறுதியில் மரணமடைந்துள்ளார்.

அவரது தாயார் குறித்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர்.  தாயார் தனது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். Adam Lanza வின் சகோதரர் Ryan Lanza சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். Adam இன் பெண் தோழி ஒருவரும், இன்னொரு நண்பரும் நியூடவுனிலிருந்து தலைமறைவாகியுள்ளனர்.

இத்துப்பாக்கிச்சூட்டில் 5-10 வயதுக்குட்பட்ட 18 பச்சிளம் மாணவர்கள், பள்ளியிலேயே மரணமடைந்துள்ளனர். இருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.

கறுப்பு நிற உடையில் புல்லட் ஃபுரூஃப் அணிந்து வந்த குறித்த இளைஞர் பல துப்பாக்கிகள் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 2012 இல் அமெரிக்காவில் மிக அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவமாகவும், அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது மிக அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய கல்லூரி துப்பாக்கிச்சூட்டு சம்பவமாகவும் இது பதிவாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஔரோராவில் பேட்மேன் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கில் நடந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டதுடன், கடந்த ஆகஸ்ட் மாதம் விஸ்கோன்சினில் சீக்கிய கோவிலில் நடந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில், 6 பேர் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

'எமது இதயம் உடைந்துவிட்டது. இறந்த பச்சிளம் சிறார்களின் பெற்றோர், தாத்தா பாட்டியினர், சகோதரர்கள், அவர்களது குடும்பத்திற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை' என அமெரிக்க அதிபர் ஒபாமா கண்ணீருடன் தனது அஞ்சலியை பதிவு செய்தார். அமெரிக்காவில் சட்டவிரோத துப்பாக்கி பாவணையை கட்டுப்படுத்த வலுவான தேவை எழுந்துள்ளதை மீண்டும் இச்சம்பவம் நிரூபித்துள்ளது. இனி இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு பதில் சொல்வதற்கு அர்த்தமுள்ள மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஒபாமா நேற்று அறிவித்தார். இது ஆயுத கட்டுப்பாடு குறித்த புதிய கொள்கையை  அமல்படுத்துவதற்காக இருக்கலாம் என கருதப்படுகிறது.
வகுப்பில் புகுந்த துப்பாக்கிதாரி ஒரு ஆசிரியரை சுட்டதும், அங்கிருந்த மாணவன் ஒருவன் தனது நண்பர்களை அழைத்து கொண்டு உடனடியாக வகுப்பறையிலிருந்து வேகமாக வெளியேறி தப்பியுள்ளான்.  அவனது சாதுரியமான நடவடிக்கை பாராட்டப்படுவதுடன், ஆடைகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்படும், அலமாரியில் 15 சிறுவர்களை உள்ளே பூட்டி லாக் செய்து காப்பாற்றிய மற்றுமொரு பள்ளி ஆசிரியரும் பாராட்டப்பட்டுள்ளார்.
நன்றி:4தமிழ் மீடியா

0 கருத்துகள்: