சிரிய அதிபர் பஸருல் ஆஸத்தின் நாட்கள் எண்ணப் படுவதாக மேலைத்தேய தலைவர்கள் கருத்துரைக் க ஆரம்பித்துவிட்டார்கள்.இந்த நிலையில் இறுதி நே ரத்தில் அயல் நாடுகளின் மீது தாக்குதலை நடாத்தி போரை திசை திருப்ப சிரிய அதிபர் ஆஸாத் முயல் வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நேற்று சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்ற அ ச்சம் வெளியிடப்பட்டிருந்தது, அதைத் தொடர்ந்து அ மெரிக்காவின் அடுத்த செயற்பாடு
முடுக்கிவிடப்பட் டுள்ளது.அமெரிக்காவின் ஆறு பற்றியாற்றிக் ஏவுகணைகளும், அதை இயக் குவதற்கான 400 அமெரிக்க மரைன் படையினரும் துருக்கி – சிரிய எல்லைப் பகுதிக்கு விரையவுள்ளனர்.
முடுக்கிவிடப்பட் டுள்ளது.அமெரிக்காவின் ஆறு பற்றியாற்றிக் ஏவுகணைகளும், அதை இயக் குவதற்கான 400 அமெரிக்க மரைன் படையினரும் துருக்கி – சிரிய எல்லைப் பகுதிக்கு விரையவுள்ளனர்.
இதற்கான அனுமதியில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோ பனீட்டா நேற்று கையொப்பமிட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் எழுதியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து 2 பற்றியாற்றிக்குகளுடன் ஒரு கப்பலும், ஜேர்மனியில் இருந்து ஒரு கப்பலும், கொலண்டில் இருந்து இன்னொரு கப்பலும் துருக்கி புறப்படுகின்றன.
வரும் தை மாத முடிவுக்குள் இவர்கள் சிரிய – துருக்கி எல்லைப்பகுதியில் நிலைகொண்டுவிடுவார்கள்.
சிரியாவில் இருந்து துருக்கி நோக்கி வரக்கூடிய ஏவுகணைக தாக்குதல்களை முறியடிக்க இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இப்படைப்பிரிவினர் நேட்டோ படைப்பிரிவின் கட்டுப்பாட்டில் இயங்குவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக