தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.12.12

ரொஹிங்யா முஸ்லிம்கள் முகாமிற்கு வரும் உணவுகளை தடுக்கும் உள்ளூர் பெளத்தர்கள்.


மேற்கு பர்மாவில் 6 மாதங்களாக நடந்த இனவன்முறைகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது குடிமனைகளை இழந்துள்ளனர்.ராக்கைன் மாநிலத்தில் பௌத்தர்களும் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கும் இடையிலான இந்த வன்முறைகள் இரண்டு சமூகங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ராக்கைன் மாநிலத்தின் தலைநகர்
ஸிட்வேக்கு தெற்காக உள்ள மைபோன் குடாநாட்டில் சாலைகளில் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டு இரண்டு பிரிவினரும் தனித்தனியாக பிரித்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை, இரண்டு சமூகங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து வேறுவேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக முறைப்பாடுகள் உள்ளன.
ரொஹிஞ்சா முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக மனிதநேயப் பணியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேநேரம் இந்த மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வந்தடைவதற்கு உள்ளூர் பௌத்தர்கள் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
படகு மூலமாகவே நிவாரண விநியோகம் நடக்கவேண்டியுள்ள சூழ்நிலையில், நிவாரணப் படகுகளை உள்ளூர் பௌத்தர்கள் தடுத்துவருவதாக மனித நேயப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
பர்மிய இராணுவத்தினராலேயே பிரச்சனைகள் இன்றி இந்த நிவாரணப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்கின்ற போதிலும், இராணுவத்தினர் அதற்கு தயங்குவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, ஒரு மைல் தொலைவில் பௌத்தர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் உணவு மற்றும் மருந்துவிநியோகம் தாராளமாக இருப்பதனை அங்கு சென்றுவந்த பிபிசி செய்தியாளரால் காணமுடிந்தது.
ஐநாவின் மனிதநேய உயரதிகாரியான வெலரி அமொஸ்ஸுடன் பர்மிய இராணுவத்தின் ஹெலிகொப்டரில் இரண்டு முகாம்களையும் சென்று பார்ப்பதற்கான அரிதான வாய்ப்பொன்று பிபிசி செய்தியாளருக்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: